பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. அதிமுக முன்னாள் பிரமுகர் சிக்கியது எப்படி?.. பரபர தகவல்
கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி அருளானந்தம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டியது அம்பலமானது.
Recommended Video

இதையடுத்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அருளானந்தன்
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அதிரடியாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக நிர்வாகி
இவர்கள் மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் ஜனவரி 20 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே அதிமுக நிர்வாகியான அருளானந்தன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

தகவல்கள்
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் அருளானந்தம் இந்த வழக்கில் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு பெண்கள்
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் மேற்கண்ட 3 பேர் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இத்தனை நாட்களாக கொரோனா ஊரடங்கால் இருந்த இரு பெண்களும் தற்போது புகார் அளித்துள்ளனர். அருளானந்தம் குறித்து சிபிஐ போலீஸாரிடம் அந்த இரு பெண்களும் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர். அந்த இரு பெண்களும் காரில் கடத்தப்பட்டு திருநாவுக்கரசு வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications