தங்கம் பாம்புக்கு கூட பிடிக்கும் போல.. யாருமே நம்ப முடியாத சம்பவம்.. திகைத்த மக்கள்
கோவை: கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் அடூர் அருகே உள்ள பதிக்கால் பகுதியில் வசித்து வருபவர் ரவி என்பவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் அருகே பொருட்கள் வைக்க செட் கட்டியிருந்தார். அந்த செட்டில் கண்ட காட்சி தான் ஆச்சரியப்படுத்தியது. 4 அடி நீள சாரப்பாம்பு.. தங்க மோதிரத்திற்கு தலையை விட்டு பாதி உடலையும் விட்டிருக்கிறது. ஆனால் சிக்கி கொண்டது. அதெப்படி திமிங்கலம் என்று கேட்பது போல் நடந்த சம்பவம் பற்றி விரிவாக பார்ப்போம்.
பொதுவாக பாம்புகள் கோடைக்காலத்தில் வெப்பத்தை தாங்க முடியாமல் வெளியே வந்துவிடுகின்றன. இரைதேடி அலையும் போது, மனிதர்கள் கண்ணில் சிக்குகின்றன. அப்போது தான் மனித பாம்பு மோதலாக உருவெடுக்கிறது. பாம்புகள் யாரையும் தேடி சென்று ஒரு போதும் கடிக்காது. ஆனால் பாம்பு செல்லும் வழியில் திடீரென மனிதர்கள் தென்பெட்டால் அது ஒதுங்கி செல்லவே பார்க்கும்.. மாறாக அச்சுறுத்தும் வகையில் சம்பவங்கள் நடந்தாலோ அல்லது பாம்பு பயப்படும் வகையிலான நிகழ்வுகள் நடந்தால், பயத்தில் தான் தனது உடலில உள்ள விஷத்தை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கும்.

ஒரு பாம்பு இரையை கைப்பற்ற வைத்திருக்கும் விஷத்தை அவ்வளவு எளிதாக வீணடிக்காது. தனக்கு ஆபத்து என்கிற போதே பயன்படுத்துகிறது. பாம்புகள் பொதுவாக மனிதர்களை கண்டால் வேகமாக சென்று ஓடி ஒளியும். அப்படி சென்ற சாரைப்பாம்பு, தங்க மோதிரத்திற்கு தலையை விட்டு பாதி உடலையும் விட்டிருக்கிறது. ஆனால் அதன்பிறகு பாம்பால் தங்க மோதிரத்தில் இருந்து தப்ப முடியவில்லை.. இந்த சம்பவம் கேரளாவின் காசர்கோட்டில் நடந்துள்ளது.
கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் அடூர் அருகே உள்ள பதிக்கால் பகுதியில் வசித்து வருபவர் ரவி சைலஜா தம்பதி, புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதனால் தம்பதி ஒரு ஷெட் அமைத்து, அதற்குள் பொருட்களை வைத்து தங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் சைலஜா அங்கிருந்த மேஜையை திறந்தார். அப்போது அதற்குள் பாம்பு இருந்ததை பார்த்தார்.
உடனே அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மேஜையை திறந்து பார்த்தபோது, 4 அடி நீள சாரைப்பாம்பு நகர முடியாமல் தவித்தது. மேஜையில் இருந்த 1 பவுன் தங்க மோதிரத்துக்குள் பாம்பின் உடல் சிக்கியிருக்கிறது.

இதையடுத்து வனத்துறையினர் மோதிரத்தை வெட்டி எடுத்து, பாம்பை பத்திரமாக மீட்டார்கள். மேலும் அதன் உடலில் மோதிரம் சிக்கியதால் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது. கேரளத்தில் கோடை வெயிலால் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாம்பு உடலில் மோதிரம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications