கோவையில் தீ பிடித்து எரிந்த சாலை.. 500 மீட்டருக்கு இப்படி எரியுதே! காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் நடுரோட்டில் சாலை தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கோவையில் 500 மீட்டருக்கு தீ பிடித்து எரிந்த சாலை - வீடியோ

    ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட்டை ஏற்றி லாரி ஒன்று வந்துள்ளது. உயர் ரக பெயிண்ட்டை ஏற்றி வந்த அந்த லாரி வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்தது.

    சுமார் 200 மீட்டருக்கு அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து இருக்கிறது.

    விபத்து

    விபத்து

    நல்லவேளையாக எதிரே வாகனங்கள் எதுவும் அப்போது வரவில்லை. சரியாக லாரி கருமத்தம்பட்டி மேல்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அப்படியே கவிழ்ந்து விபத்திற்குள்ளாது. சுமார் 200 மீட்டர்கள் அந்த லாரி சரிந்து கொண்டே சென்றது. இதில் லாரியின் டீசல் வெளியேறியது. அதேபோல் லாரியின் டேங்கரில் இருந்த பெயிண்ட்டும் வெளியேறியது.

    படம்

    படம்

    லாரி டேங்கரின் மேல் பக்கம் திறந்ததில் சாலையில் அப்படியே பெயிண்ட் கொட்டியது. இதையடுத்து லாரி வெயிலில் அங்கேயே தீ பிடித்து எரிய தொடங்கியது. பெயிண்ட் கீழே ஊற்றி, டீசல் கலந்து சாலையில் சில மீட்டர்கள் ஓடியது. நடுரோட்டில் பெயிண்ட் ஓடிய நிலையில் அதிலும் தீ பிடித்தது. இந்த விபத்தால் சாலை ஓரம் சுமார் 500 மீக்கு தீபற்றி கரும்புகை சூழந்தது.

    ஓடினார்

    ஓடினார்

    சாலையில் இப்படி நெருப்பு பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரி தீ பிடித்ததும் லாரி ஓட்டுனர் சட்டென குதித்து வெளியே ஓடி வந்தார். பின்னர் லாரி கிளீனரையும் வெளியேற்றினார். இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் பிரவீன் மற்றும் கிளீனருக்கு சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    தீ அணைக்கப்பட்டது

    தீ அணைக்கப்பட்டது

    ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. சிறு காயங்களுடன் இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறுத்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+