முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அட்டை பெற சூப்பர் வாய்ப்பு.. ரூ.5 லட்சம் வரை பலன்
கோவை: முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் கோவை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயிர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 300-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். கோவை மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர்ந்து 4 வாரங்கள் வரை நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வருமாறு:- தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூரில் மாநகராட்சி வார்டு எண் 87-ல் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) 2 நாட்கள் நடைபெறுகிறது. 88-வது வார்டுக்கு நாளை மறுநாள் நடக்கிறது. இதேபோல் 93-வது வார்டுக்கு 12-ந் தேதியும், 89-வது வார்டுக்கு 13-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
கிணத்துக்கடவு, சூலூர்: கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு இன்றும், வார்டு எண்- 6, 7, 8, 9, 10 ஆகிய பகுதிகளுக்கு நாளையும், வார்டு எண்- 1, 2, 3, 4, 5 ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. சோளம்பாளையத்தில் 12-ந் தேதியும், வடபுதூரில் 13-ந் தேதியும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
சூலூர் பேரூராட்சியில் வார்டு எண்- 4, 5, 6, 7 ஆகிய இடங்களில் இன்றும், வார்டு எண்- 1, 2, 3, 8, 9 ஆகிய இடங்களில் நாளையும், வார்டு எண்- 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ஆகிய இடங்களில் நாளை மறுநாளும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி: பொள்ளாச்சி நகராட்சியில் 1, 2, 3 ஆகிய வார்டு பகுதியில் நாளையும், 29, 30, 33 ஆகிய வார்டு பகுதியில் நாளை மறுநாளும், 20, 21, 25 ஆகிய வார்டுகளில் 12-ந் தேதியும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறும். இதேபோல் ஆனைமலை பேரூராட்சியில் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கான பதிவுகள் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடனுதவிகள் வழங்குவதற்கும் இம்முகாம்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்" இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications