தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள்.. வட மாநிலத்தவருக்கு எப்படி வாக்குரிமை? திமுக வேட்பாளர் புகார்
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளது.
இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல திமுக சார்பில் திமுக சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார். இருவரும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளார்,
இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி தனது ட்விட்டரில், "தொண்டாமுத்தூர் தொகுதியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் ஈசானா விஹார் மற்றும் பாரதியார் வீதி பகுதிகளில் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வார்டு எண் 5ல் வசிக்கும் அவர்கள் வாக்குரிமை பெறும் அளவிற்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்ல.
கிட்டத்தட்ட ஒரே வளாகத்திற்குள் 700 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் முகவரி ஒரே முகவரியாக உள்ளது. எவ்வாறு அந்த குறிப்பிட்ட வீடுகளில் 50லிருந்து 100க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அமைச்சர் வேலுமணியின் தலையீட்டில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications