Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரின் திட்டம்.. பயிர் காப்பீடு பலன்.. கோவை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், செல்போன் எண், நிலஉடைமை விவரங்கள் விடுபடாமல் இணைக்கும் பணி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் நடைபெற்று வருகிறது. 2025-26-ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன் பெற தேசிய அளவிலான தனி அடையாள எண் மிகவும் அவசியம் ஆகும். இந்நிலையில் மத்திய, மாநில அரசு திட்டத்தில் பயன் அடைய தனி அடையாள அட்டை எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 12 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இதேபோல் தமிழ்நாடு அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு உத்தரவின்படி, விவசாயிகளின் பெயர், நிலங்கள் தொடர்பான விவரங்கள், ஏற்கனவே, 'கிரெய்ன்ஸ்' என்ற மொபைல் செயலி வழியே, பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, தமிழக வேளாண் துறை சார்பில், பயிர் சாகுபடி தொடர்பாக, விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

Important announcement by the Agriculture Officer to the farmers of Coimbatore district

இந்நிலையில், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு, அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 'பார்மர்ஸ் ரிஜிட்டரி' என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு அடையாள எண் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.பல விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுவிட்டார்கள். ஒவ்வொரு விவசாயிக்கும், ஆதார் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில், விவசாயத்திற்கு தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் வழங்க உள்ளன. வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கும், இதை பயன்படுத்த முடியும். இந்நிலையில் இதுவரைபதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்யுமாறு வேளாள் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்,

கோவை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "கோவை மாவட்டத்தில் மொத்தம் 85,429 விவசாயிகள் உள்ளனர். பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 68,596 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை 39,026 பேர் மட்டும் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெற விவசாயிகள் தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.

இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களின் பயனை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், செல்போன் எண், நிலஉடைமை விவரங்கள் விடுபடாமல் இணைக்கும் பணி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் நடைபெற்று வருகிறது. 2025-26-ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன் பெற தேசிய அளவிலான தனி அடையாள எண் மிகவும் அவசியம்.

எனவே வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களுக்கு விவசாயிகள் நேரடியாக சென்று தங்கள் நிலஉடைமை விவரம், ஆதார் எண், செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமும் இன்றி 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+