கோவை மாவட்ட திமுக 5-ல் இருந்து 3ஆக குறைப்பு! 2 நிர்வாகிகளுக்கு கல்தா! செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்ட்
கோவை: கோவை மாவட்டத்தில் 5 அமைப்புகளாக இருந்த இருந்த திமுக, நிர்வாக வசதிக்காக 3ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போதுள்ள 5 மாவட்ட பொறுப்பாளர்களில் இருவரது பதவி பறிபோகும் என்பது உறுதியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்டில் உள்ள அந்த இருவர் யார் என்பது தான் இப்போது கோவை மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

2020ஆம் ஆண்டு
கடந்த 2020ஆம் ஆண்டு கோவை மாவட்ட திமுகவானது 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வரதராஜன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுபாளராக பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.

3 ஆக குறைப்பு
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிடுள்ள அறிவிப்பில், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்றாக மட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய அமைப்பு முறைகள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதுள்ள 5 மாவட்ட பொறுப்பாளர்களில் இருவரது பதவி பறிபோகும் என்பது உறுதியாகியுள்ளது.

யார் அந்த இருவர்?
கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் மருதமலை சேனாதிபதி ஆடியோ விவகாரத்தில் சிக்கியதால் அவரது பெயர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், ராமச்சந்திரன் வசம் உள்ள பதவியும் பறிபோக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் சிங்காநல்லூர் கார்த்திக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

உடன்பிறப்புகள் விவாதம்
கோவை மாவட்டம் 3 ஆக நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்பட்டது முதல் அந்த மாவட்ட திமுகவினர் மத்தியில் இது தொடர்பான பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்டச் செயலாளர் தேர்தலில் யார் விருப்பமனு அளிக்கிறார்களோ, அப்போதே கோவை மாவட்ட புதிய திமுக செயலாளர்கள் யார் என்பது தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications