இதுக்கு பேருதான் பணத்திமிர், பணக்கொழுப்பு.. பணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.. சீமான் பாய்ச்சல்!
சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரம் செய்தபோது திமுகவை சாடினார்.
சூலூர்: "இங்கே அளவுகடந்த பணக்கொழுப்பில் அவரவர்கள் அரசியல் செய்து கொண்டு மக்களை மந்தைகளாக நடத்துவது இந்த தமிழ்நாட்டில்தான் நடக்கும்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறியுள்ளார்.
பொதுவாக சீமான் பேச்சுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் கூட்டம் கூடும். ஒரு துறை விடாமல், ஒரு கட்சியை விடாமல் நோண்டி நுங்கெடுத்துவிடுவார்.
நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கேட்கும் சில கேள்விகள் எல்லா நியாயம் என்றே தோன்றும். அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கவும் செய்வார், திடீரென உலக பொருளாதாரம் பற்றி பேசவும் செய்வார். இதனால் இவரது பேச்சுக்கள் நிறையவ விமர்சனங்களை ஏற்படுத்தும்.

சூலூர் பிரச்சாரம்
இப்போது 4 தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். சூலூர் பிரச்சாரத்தில் சீமான் பேசியபோது: "செந்தில்பாலாஜி சொல்றாரு, செந்தில்நாதனுக்கு கூட்டமே வராதுன்னு. அது எப்படி உறுதியா சொல்றாரு.. ஏன்னா, 100 ரூபாய் குடுத்து இவங்க கூட்டத்துக்கு கூப்பிட்டா, 200 கொடுத்து வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறார் செந்தில் பாலாஜி! இதெல்லாம் எந்த நாட்டில் நடக்கும். இதுக்கு பேருதான் பணத்திமிர், பணக்கொழுப்பு!

வெளிநடப்பு
செந்தில் பாலாஜி இப்போ வந்து என்ன ஆயிட போகுது? திமுகவுக்கு ஒரு கூடுதல் எண்ணிக்கை. அவ்வளவுதான். எடப்பாடி முதல்வராக இருந்தபோதே, ஸ்டாலின் முழுநேரமும் சட்டசபையில் இருந்தது கிடையாது. எப்ப பார்த்தாலும் வெளிநடப்பு. ஒரு விவாதத்திலும் பங்கு கொள்வது இல்லை.

இரட்டை இலை, உதயசூரியன்
அதிமுக வேட்பாளர் ஜெயிச்சா என்ன ஆகும்? இருக்கிற கொடுமையான ஆட்சி இன்னும் 6 மாசம் அதிகமாக நீடிக்கும். அவ்வளவுதான்! இப்படியே இரட்டை இலை, உதயசூரியன்..ன்னு இப்படியே மாறி மாறி இவங்களுக்கு ஓட்டு போட்டு, இவங்களவிட்டா வேறு யாரும் இல்லைன்னு சொல்லாதீங்க. கேட்டா.. எம்ஜிஆர் சின்னம், அம்மா சின்னம்னு சொல்றாங்க. ரெண்டு கட்சிக்காரங்களும் அம்மா படத்தை வெச்சிட்டு திரியறாங்க. அம்மா என்னதான் செஞ்சுது?

தகுதி நீக்கம்
பாலியல் வழக்கோ, சொத்து வழக்கு, அல்லது கொலை, குத்து, கொள்ளை செஞ்சிட்டாங்கன்னு தகுதி நீக்கம் செய்தால் அதை ஏத்துக்கலாம். ஆனால் எங்கள் கட்சியை ஆதரிக்கவில்லை என்பதால் தகுதி நீக்கம் செய்றது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம் இது?

கேடு கெட்ட ஜனநாயகம்
இங்கே அளவுகடந்த பணக்கொழுப்பில் அவரவர்கள் அரசியல் செய்து கொண்டு மக்களை மந்தைகளாக நடத்துவது இந்த தமிழ்நாட்டில்தான் நடக்கும். பக்கத்துல இருக்கிற கேரளாவில் இப்படிதான் ஆட்சி நடக்குதா? மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், ஸ்கூட்டி, ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க ஓட்டு வாங்கிட்டு போறாங்களே.. இது எவ்வளவு கேடு கெட்ட ஜனநாயகம்?" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications