வேட்புமனு தாக்கல் செய்ய வந்து..தேர்தல் அதிகாரிகளை பயமுறுத்திய சுயேச்சை வேட்பாளர்! கோவையில் ருசிகரம்
கோவை: கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரை பார்த்து தேர்தல் அதிகாரிகள் வியப்படைந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியின் பலம்
இந்த தேர்தலில் கட்சியின் பலம் ஒரு புறமிருந்தாலும் உள்ளூரில் இருக்கும் செல்வாக்கும் கை கொடுக்கும் என்பதால் சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். அந்த வகையில் கோவை தெற்கு மண்டலம் 94 வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் சக்திவேல் (45).

குனியமுத்தூர் மண்டலம்
இவர் குனியமுத்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்து சென்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதற்காக பிபிஇ கிட் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

வியப்படைந்த அதிகாரிகள்
முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டப்பின் மனுவை பெற்று கொண்டனர். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல நன்மைகளையும் உதவிகளையும் செய்துள்ளதாக சக்திவேல் தெரிவித்துள்ளார்.

பிபிஇ கிட் ஏன்?
இந்த பிபிஇ கிட்களை கொரோனா முன்கள பணியாளர்கள் அணிந்திருந்தனர். கொரோனா தொற்று நோய் என்பதால் அந்த நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸுகள், சளி பரிசோதனை செய்யும் ஊழியர்கள் இந்த பிபிஇ கிட்டை அணிந்து கொண்டிருப்பர். இதன் மூலம் கொரோனா அவர்களிடம் இருந்து நோயாளிக்கோ நோயாளியிடமிருந்து அவர்களுக்கோ பரவாது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications