கோவை கிரிக்கெட் மைதானத்தை விடுங்க.. ஆர்எஸ்புரத்துல பிரம்மாண்டமா வருது சர்வதேச ஹாக்கி மைதானம்

Subscribe to Oneindia Tamil

கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதியாக அறிவித்தது. இந்நிலையில் கோவையில் ரூ.9 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கோவையின் மையப்பகுதியான ஆர்எஸ்புரத்தில் இந்த மைதானம் அமையவுள்ளது.

தொழில் மையமான கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சில முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

coimbatore hockey

அவிநாசி சாலையில் ரூ.1,700 கோடி மதிப்பில் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தப் பாலம் நீலாம்பூர் வரை 5 கி.மீ நீட்டிக்கப்படும் என்று கூறினார். செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், தங்கநகை பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டமும் காத்திருப்பில் உள்ளது. மறுபக்கம் ஐடி துறையிலும் ◌ கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. டைடல் பார்க், எல்காட் வளாகத்துடன் மேலும் சில ஐடி பார்க் அமையவுள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்எஸ்புரம் பகுதியில் உலக தரப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஹாக்கி மைதானம் அமையவுள்ள அந்தப் பகுதியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி "ஆர்எஸ்புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் தொடங்கும். இது ஹாக்கி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அவர்களின் கோரிக்கையை முதல்வர் மு.க. ,ஸ்டாலின் மற்றும், விளையாட்டுத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை செயல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுமளவுக்கு விளையாட்டுத்துறையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உலகத்தரத்தில் அமையவுள்ள இந்த மைதானத்தில் செயற்கை புள்வெளி அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

பணிகளை விரைந்து முடித்து, இந்த மைதானத்தை வருகிற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். பணிகள் வேகமாக நடைபெறும். விளையாட்டு வீரர்களும், மக்களும் மைதானம் நகரப் பகுதியில் அமைந்தால் உதவியாக இருக்கும் என்று கூறினார்கள். அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் மைதானம் அமைந்தால், வீரர்களும், மக்களும் சென்று வருவதில் சிரமம் ஏற்படும். அதனால் புறநகர் பகுதியில் அமைக்கவில்லை." என்றார்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் ஹாக்கி வீரர்களும், கோவை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+