"ஹீரோ" இறையன்பு கலக்கல்.. "பேசாமலேயே 2 பேருக்கும் புரிதல் வேணும்".. மகிழ்ச்சியோடு பார்த்த பொள்ளாச்சி
கோவை: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்ட விழாவானது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில், சில முக்கிய அறிவுரைகளை தம்பதியர்களுக்கு இறையன்பு வழங்கியிருந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.. மனைவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழா நடந்தது.

தம்பதியினர்: இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர்.. அப்போது, தம்பதியினர் அனைவரும், நேருக்கு நேர் உட்கார்ந்து பூ மற்றும் பழங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதாவது, மனைவிகளுக்கு கணவன்கள் மலர்களை தந்தார்கள்.. மனைவிகள், தங்கள் கணவர்களுக்கு கனிகளை தந்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மனைவிக்கு சிலர் ரோஜாப்பூ தந்து வாழ்த்து சொன்னார்கள்.
இந்த விழாவில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு பேசும்போது, குடும்ப ஒற்றுமைகள் குறித்து வலியுறுத்தினார்.. அத்துடன், தம்பதியினருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
ஒரே வீடு: இறையன்பு பேசும்போது, "இந்தியாவில், இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்டன. அந்தவகையில், தற்சமயம் தனித்த குடும்பங்களே வந்து விட்டன. ஒரே வீட்டில், கணவன், மனைவி பேசாமலேயே பிரிந்து வாழ்கிறார்கள்.. அதேபோல, பல இடங்களில், ஒற்றை பெற்றோர் குடும்பம் பெருகி வருகின்றன.. இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மனைவிக்கு மரியாதை: குடும்பத்தில், கணவன் - மனைவி 2 பேருமே பேசாமல் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பம்
தளிர்க்கும். பெண்கள் சுதந்திரமாக சிந்திக்க துவங்கி விட்டனர். குடும்பத்தில், மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இருவரும், புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ வேண்டும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications