Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபி ராதாகிருஷ்ணன் "அவுட்".. கோவையை தட்டி தூக்க போகும் "இளம்" பாஜக தலை.. ரூட் கிளியர்! மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுவார் என்று கருதப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஆளுநர் ஆன நிலையில் கோவையில் பாஜக சார்பாக யார் களமிறக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்னாய்க் அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். லக்‌ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆளுநர்கள் மாற்றம்

ஆளுநர்கள் மாற்றம்

சிவ் பிரதாப் சுக்லா- இமாச்சல பிரதேசம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். குலாம் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர்- ஆந்திரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆந்திரா ஆளுநர் பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் - சத்தீஸ்கர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஶ்ரீ அனுசுயா- மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகான் - மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இமாச்சல பிரதேச ஆளுநர்- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயாஸ்- மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பிடி மிஸ்ரா- லடாக் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சிபிஆர்

சிபிஆர்


கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுவார் என்று கருதப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஆளுநர் ஆன நிலையில் கோவையில் பாஜக சார்பாக யார் களமிறக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்ததில் முக்கிய பங்கு வகிக்கும் தலைவர்களில் ஒருவர் சிபி ராதாகிருஷ்ணன். இவர் பாஜக தலைவராக இருந்த காலத்தில் குமரி முதல் சென்னை வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அதோடு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இவர் வெற்றிபெற்றுள்ளார். 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு வரிசையாக 1998, 1999 தேர்தல்களில் வென்றார்.

வெற்றி

வெற்றி

1998 தேர்தலில் 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். 1999ல் 55000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதன்பின் நடந்த தேர்தல்கள் எதிலும் இவர் வெல்லவில்லை. கொங்கு மண்டலத்தில், கோவை குண்டுவெடிப்பிற்கு பின் கட்சியை வளர்த்ததில் இவரின் பங்கு முக்கியம் ஆகும். முக்கியமாக 2004க்கு பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முக்கிய காரணமாக இவர் இருந்தார். ஆர். எஸ். எஸ். மற்றும் ஜன சங்கத்துடன் 1973ல் இருந்து மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தல்களில் இவர் கோவையில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 கோவை தொகுதி

கோவை தொகுதி

ஆனால் இவர் தற்போது ஆளுநர் ஆகிவிட்டதால் கோவையில் போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாஜக தேசிய தலைவர் நட்டா கோயம்புத்தூர் வந்தார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை. மக்களுக்கு வேலை இல்லை. இங்கே உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் பாஜக தேவை. அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். இதுதான் இப்போது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள், என்று கூறி கோவையில் பாஜகவின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

கோவை

கோவை

இந்த முறை கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கண்டிப்பாக போட்டியிட போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் கோவையில் சிபி ராதாகிருஷ்ணன் இல்லாததால் பாஜக யாரை இறக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பாஜக சார்பாக நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் ஒருவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கோவையில் பாஜகவை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் போட்டியிட போவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அந்த இளம் தலைவரை கோவையில் வெல்ல வைத்து மத்திய அமைச்சராக்கும் திட்டம் மத்திய பாஜகவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த இளம் தலைவருக்கு கோவையில் "மவுஸ்" கூடி வருவதால் , அவரை கோவையில் களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+