கல்வி நோக்கத்திற்காக ஈஷா கட்டிடம் கட்டியதால் சுற்றுசூழல் அனுமதியே தேவை இல்லை- கோர்ட்டில் மத்திய அரசு
கோயம்புத்தூர்: கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கோவை ஈஷா அறக்கட்டளை விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியதாக சில புகார்கள் உள்ளன. முக்கியமாக சுற்றுசுழல் அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியதாக புகார்கள் உள்ளன.
இந்த நிலையில்தான் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நோட்டீஸ்
இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஈஷா அறக்கட்டளை சார்பில் சி.ஆர். தினேஷ் ராஜா என்பவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதில் 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிட்டு விதிகளின் எங்கள் நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் 2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி எங்கள் கட்டிடத்திற்கு சுற்றுசுழல் அனுமதி தேவை இல்லை.

அனுமதி தேவை இல்லை
அதனால் எங்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்க கூடாது என்று ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களுக்கு எதிரான மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸ் விதி மீறல். அதனால் அவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.

ஈஷா வாதம்
2014ல் பிறப்பிக்கப்பட்ட விதிப்படி நாங்கள் கல்வி நிறுவனம் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற வேண்டியது இல்லை, என்று ஈஷா தெரிவித்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் இதில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதனால் அதில் தவறு இல்லை

தேவை இல்லை
2014 சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ((செப்டம்பர் 28)) தள்ளிவைத்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications