லாட்டரி மார்ட்டின் வீட்டில் 3வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு.. சிக்கிய ஆவணங்கள் என்ன?
கோவை: தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடத்தும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகிலேயே மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இது தவிர கவுண்டர்மில் பகுதியில் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதியிலும் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.

வியாழக்கிழமை காலை 8 முதல் இந்த 4 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்டோர் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரிச்சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றது தொடர்பாக மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டில் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக சம்பாதித்த ரூ.910 கோடியை, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மார்ட்டின் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தியது. மேலும், பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இதேபோல, கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, ரூ.456.86 கோடி சொத்துகளை முடக்கினர். இந்நிலையில், அமலாக்கத் துறையினர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வியாழக்கிழமை சோதனையைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகே உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, சென்னையில் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனின் அடுக்குமாடிக் குடியிருப்பு, திருவல்லிக்கேணியில் உள்ள நிறுவனம் மற்றும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்ட்டின் தொடர்புடைய இடம் ஆகியவற்றிலும் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையானது மூன்றாவது நாளாக நீடிக்கிறது. மேலும் மார்ட்டின் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை நடத்தும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை மார்ட்டின் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications