இந்துக்களும் நாங்களும் அண்ணன் தம்பிகள் ! பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம்- ஜமாத் நிர்வாகிகள்
கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் சென்று பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் அவர்கள் சென்றனர்.
அங்கு அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் அன்பாக வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். கோயிலில் அமர்ந்து இரு தரப்பினரும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ஜமாத் நிர்வாகிகள்
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜமாத் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தால் இங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் இந்த கோட்டை மேடு பகுதியில் 7 தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். ஒற்றுமையுடனும் மத அமைதியுடனும்தான் உள்ளோம். கோட்டை மேடு பகுதிகளில் நாங்கள் மத ஒற்றுமையுடன் தலைமுறை தலைமுறையாக சிறு வயது காலங்களை மகிழ்ச்சியாக கழித்திருக்கிறோம்.

சங்கமேஸ்வரர் கோயில்
சங்கமேஸ்வரர் கோயில் எனப்படும் கோட்டை ஈஸ்வரன் கோயில், அந்த தெருவில் உள்ள மசூதி, இந்த பகுதிகளை சுற்றியுள்ள மக்கள் ஒற்றுமையோடு அண்ணன் தம்பிகள் போல் வாழ்கிறோம். நாங்கள் எப்போதும் அமைதியை போதிக்கிறோம். சிறுபான்மையின சமூகத்தினர் பெரும்பான்மை சமூகத்துடன் இணக்கமாக வாழவே விரும்புகிறோம்.

மத நல்லிணக்கம்
மத நல்லிணக்கம் பேணுவதற்காக ஜமாத் அமைப்பினர் ஒன்றிணைந்து வர்த்தக ரீதியில் நல திட்டங்களையும் செய்து வருகிறோம். மத பூசலுக்கு இங்கு இடம் இருக்காது. மத அமைதிக்கு கோவையை முன்னுதாரணமாக மாற்றுவோம். எந்த பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம்.

ஈஸ்வரன் கோயில்
ஈஸ்வரன் கோயில் தேர் நடக்கும் போது நாங்கள் கடைகளை மூடி ஒத்துழைப்பு கொடுத்ததையும் எங்கள் ஜமாத் விழாக்களின் போது மற்ற சமூக மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததையும் கோயில் நிர்வாகிகளும் நாங்களும் பரஸ்பரம் நினைவுக் கூர்ந்தோம். மேலும் கோயில் நிர்வாகிகளும் எங்கள் பகுதிக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கிறோம். மக்கள் அமைதியாக வாழ ஆக்கப்பூர்வ பணிகளை செய்வோம் என ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications