கோடநாடு கொலை வழக்கு...ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரமடையும் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது சஜீவன் சகோதரர் சிபி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சசிகலாவிடம் விசாரணை
கடந்த வாரம் கொடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2 நாட்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டதாகவும், அவர் பல தகவல்களை தெரிவித்தாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சஜீவனிடம் 2 நாட்கள் விசாரணை
இந்த நிலையில் கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்து வந்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அதிமுக வர்த்தக அணி மாநில தலைவருமான சஜீவனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.

என்னென்ன கேள்விகள்
கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்த போது சஜீவன் துபாயில் இருந்தாக கூறப்பட்டது. அவர் துபாய் சென்றதற்கான காரணம் என்ன? கொடநாடு கொள்ளை சம்பவத்தில் அவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர்.
இவர் கனகராஜின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் குறித்தும், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பிறகு அவர் உங்களை ஏதாவது தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.

கொள்ளை கும்பலுக்கு உதவினாரா?
இதுதவிர கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து ஒரு கும்பல் கேரளாவை நோக்கியும், மற்றொரு கும்பல் கோவையை நோக்கியும் சென்றன. அப்போது கேரளாவுக்கு சென்ற கும்பல் கூடலூர் சோதனை சாவடியில் போலீசாரிடம் சிக்கியதாகவும், இந்த கும்பலை இவர் தப்பிக்க வைத்தாகவும், அந்த சமயத்தில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் விசாரித்ததாக தெரிகிறது.

சஜீவனின் சகோதரரிடம் விசாரணை
சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணை வளையத்தில் பூங்குன்றன்
இந்த நிலையில் ஜெயலலிதா நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் இன்றைய தினம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் பூங்குன்றனை தனிப்படை போலீஸ் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றன் இருந்துள்ளார். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெறுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications