''ரெய்டுக்கெல்லாம் பயப்படுற ஆளு, நான் கிடையாதுங்கோ''... கோவையில் கெத்து காட்டிய கமல்ஹாசன்!
கோவை: ஒரு ஊழல் கட்சியை ஒழிக்க இன்னொரு ஊழல் கட்சி மாற்றாக இருக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ரெய்டு நடத்தி அச்சுறுத்த பார்கிறார்கள். அது என்னிடம் நடக்காது என்றும் கமல்ஹாசன் கெத்தாக தெரிவித்தார்.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் குமாரரை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் கஷ்டங்களை தீர்க்கத்தான் அரசியலுக்கு வந்தேன். மக்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் வைத்துள்ளதே கழகங்கள் ஆட்சியில்தான். ஒரு ஊழல் கட்சியை ஒழிக்க இன்னொரு ஊழல் கட்சி மாற்றாக இருக்க முடியாது.
சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ ஏற்றுமதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலத்துக்கு ரயில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திம்பம் மலைப் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் 6-ஆம் தேதி மிக முக்கியமான நாள். நீங்கள் நினைத்தால் தலையெழுத்தை மாற்றலாம் என்று கமல்ஹாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சியில் செய்ததை எல்லாம் நாங்கள் செய்யவில்லை இவர்கள் தான் செய்தார்கள் என பொய் பிரசாரம் செய்கிறார்கள். இரு தரப்பும் மாறி மாறி பொய் பேசுகிறார்கள். எங்களை ரெய்டு நடத்தி அச்சுறுத்த பார்கிறார்கள். அது என்னிடம் நடக்காது என்று கமல்ஹாசன் பேசினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications