ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்
Recommended Video

சென்னை: ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் என கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் கமலை சந்தித்தார். அப்போது அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது போல் வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் துரையரசனும் கமல்ஹாசனை சந்தித்தார். இதில் சட்டசபை இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரு கட்சிகளும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
அவை
- 5 ஆண்டுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி
- 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 500 திறன் மே்முபாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வறுமை அகற்றுவோம்
- குடிசை இல்லா தமிழகம் காண்போம்
- தமிழகத்தின் மொத்த பொருளாதார ஆதாரமான விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
- விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் ஊதியம்.
- உலகம் பரவியுள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை காப்போம்
- ஊழலுக்கு எதிராக பல் இல்லா லோக் ஆயுக்தவை வலுப்படுத்தப்படும்.
- சுங்க வரி கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
- ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்
- இலவச வைபை வழங்கும் திட்டம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications