கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க மேல தப்பு இருக்கு.. பதவி விலகிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. கமலின் அடேங்கப்பா திட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    MNM Kamal: தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் வேறு பாதையில் கமல்ஹாசன்!- வீடியோ

    சென்னை: ஆஹா கமல்ஹாசன் மேல நாளுக்கு நாள் மக்களுடைய மரியாதை அதிகமாகிட்டே போகிறது. காரணம் அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளால்.

    கமல்ஹாசன் கட்சியை தொடங்குவாரா என சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரோ 20 வருடமெல்லாம் தாமதம் செய்யாமல் டக்கென தொடங்கிவிட்டார். 4 அமாவாசைக்குள் 5 அமாவாசைக்குள் காணாமல் போய்விடுவார் என சிலர் கணித்தார்கள். ஆனால் திமுகவே கண்டு பயப்படும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறார்.

    தேர்தலில் போட்டியிடுவாரா , அவர் தனித்து போட்டியிட்டால் வேட்பாளர்களை நிறுத்த ஆள் இருக்கிறதா என்றார்கள். தனித்து போட்டியிடுவதாக அறிவித்த அவர் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். அதுவும் நச்சென்று!

    வெளுத்து வாங்கிய கமல்

    வெளுத்து வாங்கிய கமல்

    இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடி முதல் முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் வரை அனைவரையும் வெளுத்து வாங்கிவிட்டார். அதைவிட கமல் அளித்த வாக்குறுதிகள்தான் டாப்.

    பாராட்டு

    பாராட்டு

    மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சரிவர வேலை செய்யவில்லை எனில் பொதுமக்கள் புகாரளிக்கலாம். விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், ராஜினாமா கடிதம் கட்சி அலுவலகத்தில் இருந்து வரும். மக்கள் நீதி மய்ய ஆட்சி, மக்களாட்சியாக இருக்கும் என கூறியிருந்தார். இது மிகவும் பாராட்டக் கூடிய விஷயமாகும்.

    பெண்கள்

    பெண்கள்

    ஒரு எம்எல்ஏவோ, எம்பியோ, அமைச்சரோ, முதல்வரோ ஏதேனும் லஞ்சம் வாங்கினாலோ பெண்கள் விவகாரத்தில் தவறு செய்தாலோ, ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி குழந்தை பேற்றை கொடுத்துவிட்டு அதை கலைக்க முற்பட்டாலோ பாதிக்கப்பட்டவர்களால் ஒன்று செய்ய இயலாது. வேண்டுமானால் கோர்ட், கேஸ் என செல்லலாம். ஆனால் தற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியுள்ள நிலையில் இதுபோன்ற வழக்குகள் எப்போது விசாரணைக்கு வந்து? எப்போது தீர்ப்பளிப்பது?

    மல்லுக்கட்டி

    மல்லுக்கட்டி

    அதற்குள் இவர்களது பதவிக்காலமே முடிந்துவிடும். அவர்களும் சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்து விட்டு சென்றுவிடுவர். மக்களும் அடுத்த பிரச்சினைகளுக்கு சென்றுவிடுவர். கட்சியில் எப்படியாவது மல்லுக்கட்டி மீண்டும் சீட் வாங்கி ஓட்டு கேட்க வருவர்.

    ராஜினாமா

    ராஜினாமா

    பெண்கள் விவகாரத்தில் தவறு செய்யும் அரசியல்வாதிகளை தட்டி கேட்க கமல்ஹாசன் சொன்னது போல் குற்றச்சாட்டப்பட்ட நபர், புகார் கொடுத்தவர், கட்சி தரப்பு அமர்ந்து பேசி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபரின் ராஜினாமா கடிதத்தை கட்சியே அனுப்புவதுதான் சிறந்த வழி.

    கமல் ஐடியா

    கமல் ஐடியா

    தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என மிதப்பில்தான் தவறு செய்கின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசனின் ஐடியாவே சிறந்ததாகும். இதை மற்ற கட்சிகளும் பின்பற்றினால் கூட்டணி வைக்க அவசியமே இல்லை. தனித்து நின்றே வெற்றி பெறலாம்.

    English summary
    Kamal Haasan gives fine idea to sack the guilty MLA or MP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X