என்னா சேட்டை என்னா சேட்டை.. கோவையை கலக்கிய சின்னத்தம்பி.. வசமாக சிக்கி கொண்டான்!
காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
Recommended Video

கோவை: ஓவர் சேட்டை.. அமர்க்களம்.. என டிமிக்கி கொடுத்து வந்த சின்னதம்பி இப்போது வசமாக மாட்டி கொண்டான். ஆம்! மயக்க ஊசியை போட்டு சின்னதம்பி என்ற யானையை காட்டுக்கு கொண்டு போக வேலை நடந்து வருகிறது.
கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன.
அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று எண்ணி யானைகளை பிடிக்க திட்டமிட்டனர்.

பெயர் வைத்தனர்
ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் வினாயாகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் வைத்து அழைத்து வந்தார்கள்.

படு சேட்டை
இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்ததொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ படு சேட்டை... போக்கு மேல் போக்கு காட்டி எல்லாரையும் சுத்த விட்டு விடும். கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

கண்ணீர் விடை
"ஆபரேஷன் வினாயக்" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்து கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு கண்ணீர் விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

2 கும்கி யானைகள்
அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவழியாக சின்னதம்பியை பிடித்து மயக்க ஊசியும் செலுத்தப்பட்டுவிட்டது. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஆஃப் ஆகி கிடக்கிறது.

கழுத்தில் காலர் ஐடி
இனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். அதாவது இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.

தந்தம் உடைந்தன
40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சின்னதம்பியை காட்டுக்குள் விடுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சின்னதம்பியை லாரியில் ஏற்றுவதற்கான லாரி கொண்டு வரப்பட்டது. அப்போது சின்னதம்பியை லாரியில் ஏற்றும்போது அதன் இரண்டு தந்தங்களும் திடீரென உடைந்துவிட்டன. இதைக்கண்டு பொதுமக்கள் சோகம் அடைந்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications