வேறு பெண்ணுடன் ஜாலியா பேசிட்டிருந்த கணவன்.. டக்னு வந்த மனைவி! கோவையில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
கோவை: கோவை பிளம்பருக்கு பல பெண்களுடன் உறவு இருந்து வந்துள்ளது.. திருமணமான இவர், இளம்பெண்களுடன் உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளார்.. இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்த நிலையில், என்ன நடந்தது தெரியுமா? நேற்று முதல் இந்த வடமாநில தம்பதிதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது கோவையில்?
உலகம் முழுக்க கள்ளக்காதலர்கள் பெருகி கிடக்கின்றன.. இதில் பல கணவன்கள் மனைவிகளிடம் ஏடாகூடமாக சிக்கிவிடுவதும் உண்டு..

கடந்த வாரம் சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில், திருமணமான நபர் ஒருவர், தன்னுடைய காதலியை 10வது மாடியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார்..
10வது மாடி பால்கனியில்
அந்த நேரம் பார்த்து அவரது மனைவி வந்துவிட்டதால், காதலியை வீட்டின் பால்கனியில் ஒளிந்து கொள்ள சொன்னார். ஆனால் அந்த காதலியோ, காதலனின் மனைவியிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில், 10-வது மாடி பால்கனியிலிருந்து தப்பிக்க முயன்றார்.
எந்தப் பாதுகாப்பும் இன்றி, கட்டிடத்தின் வெளிப்புறக் குழாயைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்க தொடங்கினார். ஆனால், ஒரு கட்டத்தில் மேலே செல்லவும் முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் அந்தப் பெண் தவித்தார்.
உயிருக்குப் போராடிய நிலையில், கீழ் வீட்டு ஜன்னல் வழியாக உதவி கோரவும், அந்த வீட்டு நபர், அப்பெண்ணை காப்பாற்றினார்.. 10வது மாடியிலிருந்து இளம்பெண் குழாயை பிடித்து தொங்கும் காட்சி இணையத்திலும் வைரலாகி இருந்தது.
கோவையில் சிக்கிய கணவர்
இதோ நேற்றைய தினம், கோவையில் ஒரு கணவர் மனைவியிடம் வசமாக சிக்கிவிட்டார்.. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா இவருக்கு 33 வயதாகிறது.. இவருடைய மனைவி பெயர் ஜிந்தி.. 36 வயதாகிறது..
இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.. அத்திப்பாளையம் பிரிவிலுள்ள அபார்ட்மென்டில் பிளம்பராக உள்ளார். ஆனால், பிதான் ஹசாரிகாவிற்கு, பல வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது...
கணவரின் தகாத உறவு
ஒருநாள் யதேச்சையாக கணவரின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார் மனைவி ஜிந்தி.. அப்போதுதான் ஏடாகூடமான போட்டோ, மெசேஜ்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் கணவரை கண்டித்தார்.. ஆனாலும் பிதான் மனைவியின் பேச்சை கேட்காமல், அந்த பெண்களுடன் இருந்த தொடர்பையும் கைவிடாமல் இருந்தார்..
சம்பவத்தன்று ஜிந்தி வெளியில் சென்றிருந்தபோது, பிதான் தன்னுடைய வீட்டிற்கு ஒரு இளம்பெண்ணை வரவழைத்து ஜாலியாக இருந்ததாக தெரிகிறது..
பெண்ணுடன் உல்லாசம்
அப்போது திடீரென ஜிந்தி வீட்டுக்குள் நுழைந்து, இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த நிலையில், இந்த காட்சியை கண்டதுமே உச்சக்கட்ட ஆவேசத்துக்கு ஆளானார்.. இதனால் இருவருக்கும் வாக்குவாதமும், தகராறும் வெடித்தது.. அப்போது பிதான், இனி நீ இங்கே இருக்க வேண்டாம், சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கே கிளம்பி போ என்று மிரட்டியதாக தெரிகிறது.
தவறையும் செய்துவிட்டு, தன்னையும் மிரட்டுகிறாரே என்று கடும் கோபமடைந்தார் ஜிந்தி.. கணவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த பிதான், வழக்கம்போல் மதுபோதையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்..
அறையில் பூட்டிய மனைவி
அப்போது ஜிந்தி, சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பிதானின் மர்ம உறுப்பை அறுத்து வீசினார். பிறகு கணவரை அதே ரூமில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதனால் கணவரால் அறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை.. வலியால் பிதான் கத்தி கூச்சல் போட்டார்.. அருகில் வசிப்பவர்களை உதவிக்கும் அழைத்தார்..
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ரூம் கதவை உடைத்து, பிதானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது ஜிந்தியை கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications