நெஞ்சு பதறுதே.. “ராங் ரூட்டில்” வந்த கார் மோதி வேன் மீது வீசப்பட்ட பைக்! தந்தை பலி.. மகன் சீரியஸ்
கோவை: அதிவேகமாக சென்ற கார் மோதியதில் மகனை ஏற்றிக்கொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை நவக்கரையை அடுத்த கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஜாகிர் உசேன் என்பவர் தன்னுடைய 15 வயது மகன் அஜ்மலை கபடி போட்டிக்காக பைக்கில் அழைத்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் வேகமாக ஜாகிர் உசேனின் பைக் மீது மோதியது. இதில் தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர்.
கோவை நவக்கரை அடுத்த கே.ஜி சாவடி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @ASubburajTOI @kirubakaranR1 @vijay_vast @PrasannaVs7 @PrasanthV_93 #coimbatore #bikeaccident pic.twitter.com/nfAE6m1UTK
— Srini Subramaniyam (@Srinietv2) June 25, 2023
அவர்கள் ஓட்டி வந்த பைக், பின்னால் வந்த வேன் கண்ணாடி மீது மோதி குத்தி நின்றது. விபத்து ஏற்படுத்திய சாம்பல் நிற கார் அப்பகுதியில் நிற்காமல் மோதிவிட்டு வேகமாக சென்றது. பைக் ஓட்டிச் சென்ற ஜாகிர் உசேன் கார் மோதி சாலையில் வேகமாக விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து ஏற்பட்டவுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள்.

படுகாயமடைந்த ஜாகிர் உசேனின் 15 வயது மகன் அஜ்மல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சியை பார்க்கையில் நெஞ்செல்லாம் பதறுகிறது. அதிக வாகனங்கள் செல்லும் அந்த பாதை குறுகலாக இருக்கிறது.
பைக் இடதுபக்கம் சரியான திசையில் நேராக சென்ற நிலையில், எதிரே தவறான திசையில் வேகமாக கார் வந்ததே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கார் தவறான திசையில் வருவது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் தெளிவாக தெரிகிறது. அது சரியான திசையில் எதிரே பைக் மீது மோதுகிறது.
அந்த பைக் பின்னால் வந்த வேன் மீது போய் விழ, பைக் ஓட்டி வந்த ஜாகிர் உசேனும் அவர் மகன் அஜ்மலும் சாலையில் சிதறி விழுகின்றனர். அவர்களை மோதி தூக்கிவீசிவிட்டு எந்த மன சஞ்சலமும் இன்றி அந்த கார் ரேசில் செல்வதைபோல் வேகமாக இடது பக்கம் திரும்பி அங்கிருந்து தப்பிச் செல்கிறது. இந்த கார் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
