"பிரதமருக்கே துரோகம் செய்ய.. பிளான் போட்டவர் எடப்பாடி பழனிசாமி.." போட்டு உடைக்கும் கோவை செல்வராஜ்
கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் இன்னும் கூட முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.

கோவை செல்வராஜ்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் பாபா இல்லத்தில் ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கே.பி. முனுசாமி நேற்று ஓ.பன்னீர்செல்வத்தைத் தவறாகக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் தான் இந்த கே.பி.முனுசாமி. அப்படிப்பட்ட ஒருவருக்கு மூத்த பதவி வாங்கி கொடுத்தவர் பன்னீர்செல்வம்.

ஜெயலலிதா
முனுசாமிக்கு எதிராக எடப்பாடியே பேசிய போதும், அவருக்குப் பக்கபலமாக நின்று ஆதரவு கொடுத்தவர் ஓபிஎஸ். அதிமுகவில் ஓபிஎஸ் உழைக்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா ஓ.பி.எஸ்.சை பாக்கியம் என்றே கூறி இருந்தார்.. ஜெயலலிதாவிடமே விசுவாசம் மிக்க தொண்டர் என்ற பெயரை வாங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, ஓபிஎஸ் பற்றிப் பேச யாருக்கும் யோக்கியதை இல்லை.

விரக்தி
வருமான வரி சோதனை நடந்தால், அது துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். தொண்டர்களை அடியாட்கள் போல வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ரூ. 100 கோடி செலவு செய்தும் எடப்பாடிக்கு நினைத்த பதவி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்து முனுசாமியை வைத்து எடப்பாடி பேசுகிறார். உண்மையான அதிமுக எங்கள் பக்கமே உள்ளது. இங்குத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர்.

ஊழல் பட்டியல்
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு வீட்டில் கொள்ளை மற்றும் கொலை நடந்தது. ஜெயலலிதாவின் வீட்டுக்கே காவல் போடாத எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வீட்டைத் தனியார் வீடு என்றவர். கூடிய சீக்கிரம் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் செய்த தவற்றைப் பட்டியலிடுவோம்.

நாங்கள் கொடுத்த தகவல்
நாங்கள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே இரு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல வெகு சீக்கிரம் மற்றவர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம். மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டவர் ஓபிஎஸ்.

படுதோல்வி
கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று நீதிமன்றமே கூறிவிட்டது. கட்சி பைலாவை தளவாய் சுந்தரம் முதலில் படிக்க வேண்டும். கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாகச் சொல்வது பொய் அப்படி எதுவும் அங்கு இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையக் காரணமே எடப்பாடி பழனிசாமி தான். ஜெயலலிதா இருந்த இடத்திற்கு எடப்பாடி துரோகம் செய்தவர்.

பிரதமருக்குத் துரோகம்
நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் விரைவில் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார். இப்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பொருளாளரும் ஓபிஎஸ் தான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சசிகலா கட்சியின் உறுப்பினர் போலவே இருப்பார். எடப்பாடி பிரதமருக்கே துரோகம் செய்ய முயன்றவர் தெரியுமா. இந்த விவகாரத்தை விரைவில் வெளியிடுவோம். கொடி, கட்சி, சின்னம் அனைத்தும் ஓபிஎஸிடம் தான் உள்ளது" என்றார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications