நான் கைக்கூலியா? ஈசிஆரில் இடம் வாங்கி செட்டில் ஆகிடுனு சொன்னாங்க.. நான் தான் கேக்கலை! KPY பாலா வேதனை
கோவை: கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களை கேபிஒய் பாலா குறித்த எதிர்மறை விமர்சனங்களை தான் பார்க்க முடிகிறது. அவர் மோசடியில் ஈடுபடுவதாகவும், அவருக்கு பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தன்னை விமர்சிப்பவர்கள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான் என விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் கேபிஒய் பாலா.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நாயகர்கள் வரிசையில் கேபி பாலாவும் சேர்ந்து இருக்கிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் அடைந்தார்.
தனக்கு வரும் சிறு வருமானத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து வந்த அவர், சமூக வலைதளங்களில் அதனை வீடியோவாக வெளியிட்டு வந்தார். தொடர்ந்து டிராக்டர், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றையும் வழங்கி வந்த கேபி ஒய்பாலா தனது சொந்த இடத்தில் மருத்துவமனை கட்டுவதாக கூறியிருந்தார்.

கேபிஒய் பாலா
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கேபிஒய் பாலா மோசடியில் ஈடுபடுவதாகவும், வாகன பதிவு இல்லாத ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். இதை அடுத்து #balaexposed என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் பாலா. கோவையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், பிரச்சனைகள் இருப்பதால்தான் நல்ல காரியங்களை செய்கிறோம். ஆனால், நல்லது செய்யவே இங்கு பல தடைகள் உள்ளன.
#BalaExposed
இத்தனை நாட்கள் நல்லவற்றை செய்தபோது யாரும் வரவில்லை. திடீரென வந்து விமர்சிக்கிறார்கள். உண்மையில் கடவுள் சக்தியும், மக்கள் சக்தியும் மட்டுமே உண்மையானவை. இப்போதெல்லாம் ஒருவருக்கு உதவி செய்தால், அதை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால், மிகைப்படுத்தி வீடியோவாக வெளியிட்டால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒரு பிரபலம், 'நல்லது செய்யாதே, ஈசிஆரில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிடு' என்று எச்சரித்தார்.
சமூக வலைதள விமர்சனம்
இதை சிந்தித்தபோது, நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தேன். ஆனால், ஒரு கவிஞர், 'நல்லவனாக இருப்பது தவறல்ல, ஆனால் அதை நிரூபிக்க தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும்' என்றார். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், அது எனக்கு போதுமானதாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. காந்தி கண்ணாடி' படத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாக பேசி, அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்.
சினிமா புகார்
அவர்கள் மீது புகார் கொடுக்கப் போவதில்லை, அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என தெரிவித்தார். அவர்களுக்கு பணம் கிடைப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். சினிமா துறையில் உள்ள லாபிகள் பற்றி எனக்கு தெரியாது உதவி செய்வது எனது பொழுதுபோக்கு, என்று உறுதியாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications