தீபாவளி வந்தாச்சு.. பட்டையை கிளப்பும் புது கலெக்ஷன்கள்.. என்னென்ன ஆடைகள் வந்திருக்கு பார்க்கலாம்
சென்னை: தீபாவளி நெருங்கி வரும் நிலையில் புதிய ஆடைகள் வாங்க மக்கள் பலரும் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன புதிய ஆடைகள் மார்க்கெட்டுகளுக்கு வந்துள்ளது எனப் பார்க்கலாம்...
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளி வந்தாலே போதும் நம் மக்கள் புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள், பட்டாசுகள், புதிய கேட்ஜெட்டுகள், வீட்டு உபகரணப் பொருட்கள் என வீட்டின் அலமாரியே நிறைந்துவிடும் அளவுக்கு பர்சேஸ் மோடில் இறங்கிவிடுவார்கள்.

தீபாவளி கொண்டாட்டங்களை முழுமையாக்குவதில் முதலிடம் பிடிப்பது புத்தாடைகள் தான். தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே என்னென்ன கலெக்ஷன்கள் புதிதாக வந்துள்ளன என டிவிகளில் விளம்பரங்கள் வரத் தொடங்கிவிடும். தீபாவளி கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் வகையில், பட்ஜெட்டுகளிலும், லட்சங்களிலும் என ஏகப்பட்ட ரகங்களில் ஆடைகள் சந்தைகளில் வந்திருக்கின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏகப்பட்ட கலெக்ஷன்கள் மார்க்கெட்டுகளில் வந்து குவிந்துள்ளன. புதிய கலெக்ஷன்கள் என்னென்ன வந்துள்ளது எனப் பார்க்கலாம்.

ஆண் குழந்தைகளுக்கு.. பாப்கார்ன் சர்ட்ஸ், கார்கோ பேன்ட்ஸ், கோட் மூவி மாடல் சர்ட்ஸ், அடர் நிற குர்தாக்கள், மேட்சிங் பட்டு வேட்டி சட்டைகள், வெஸ்டர்ன் வியர்ஸ், டீ சர்ட்ஸ் உள்ளிட்டவை சந்தையில் டிரெண்டி கலெக்ஷன்களாக வந்துள்ளன.

பெண் குழந்தைகளுக்கு.. பாரம்பரிய பட்டுப் பாவடைகள், சராரா சார்ட் டாப்ஸ், பிளாசோ பேண்ட், சாப்ட் சில்க் கவுன்கள், வெஸ்டர்ன் மாடல் டிரெஸ், பாப்கார்ன் வெஸ்டர்ன் டாப்ஸ், ஜீன்ஸ், சராரா தோத்தி பேன்ட்ஸ், ஆலியா கட் மாடல் சுடிதார்ஸ், ஃப்ளோரல் பிராக்ஸ் உள்ளிட்ட கண்கவரும் ஆடைகள் குவிந்துள்ளன.

டிரெண்டியாகவும் இருக்கனும் அதே சமயம் டிரெடிஷனல் ஆகவும் இருக்கனும்னு நினைக்கிற இளம்பெண்களுக்காகவே பல சுடிதார் ரகங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வந்துள்ளது. பாப்கார்ன் டாப்ஸ், சாஃப்ட் டிஸ்யூ மாடல் சுடிதார், டிஸ்யூ சில்க் குர்தி, பியூர் விசித்ரா சில்க் சுடிதார், 3 பீஸ் சுடிதார் செட், சில்க் பேக்ரிகேட்டேட் குர்தி செட், ஆலியா கட் டாப்ஸ், ஃப்ளோரல் டாப்ஸ், காட்டன் ஹக்கோபா பிரிண்டெட் சுடிதார் செட் என ஏகப்பட்ட வெரைட்டிகளில் உள்ளன.

இளைஞர்களுக்கு.. பாப் கார்ன் சர்ட்ஸ், ஹூடீஸ், கார்கோ பேண்ட், காட்டன் சர்ட், கோட் மூவி மாவடல் சர்ட்ஸ், அடர் நிற குர்தாஸ், மேட்சிங் பட்டு வேட்டி சட்டைகள், கபில்ஸ் காம்போ, காப்பர், வெளிர் பச்சை, சந்தனக் கலர்களில் பட்டு வேட்டி சட்டைகள்

என்னதான் சுடிதார், டாப்ஸ் என்று வாங்கிக் குவித்தாலும் புடவைகள் மேலான கிரேஸ் பெண்களுக்கு எப்போதுமே குறையாது. பண்டிகைகள் முழுமையடைவதே டிரெண்டியான சேலைகளைக் கட்டுவதில்தான் என்று பல பெண்களும் நினைக்கின்றனர். அந்த வகையில், பெண்களுக்கான சேலைகள் ஏகப்பட்ட வெரைட்டிகளில் இந்த தீபாவளிக்கு வந்துள்ளன.

கல்யாணி காட்டன் சேலைகள், சாஃப்ட் டிஸ்யூ, பட்டுப் புடவைகள், காட்டன் புடவைகள், ஜார்ஜெட் புடவைகள், கலம்கரி பிரிண்ட், ஆரணி செமி சில்க், பிரைட் சேட்ஸ் ஜார்ஜெட் சாரீஸ், ஜூட் சாரிஸ், புட்டா டிசைன் சேலைகள், பிளைன் சேலைகள், எம்பிராய்டரி சாரீஸ், சில்க் சாரீஸ், சாப்ட் சில்க், வர்ணா சில்க் சாரி, குபேரா பட்டுப் புடவைகள், ஃப்ளோரல் புடவைகள், லைட் வெயிட்டேட் சாரீஸ் என டிரெண்டியான கலெக்ஷன்கள் வந்துள்ளன.

Credits:
Manju boutique, Saibaba colony, coimbatore.
sri saaila collections, lawley road, coimbatore.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications