கோவை மாவட்ட மக்களே.. நாளை முதல் 30ம் தேதி வரை.. கூட்டுறவு வங்கியில் மிகப்பெரிய வாய்ப்பு
கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், கலைஞரின் கனவு இல்ல கடன், வீட்டு வசதி கடன், சிறு, குறு தொழில்முனைவோர் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன் ஆகியவை நாளை முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி 39 கிளைகளில் வைப்பு நிதி சேகரித்தல் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த வகை வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
மேலும் இந்த கடனுதவி மேளாவில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், கலைஞரின் கனவு இல்ல கடன், வீட்டு வசதி கடன், சிறு, குறு தொழில்முனைவோர் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கு கடன், காலி மனை வாங்க கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படும்.
இதுதவிர டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது. இதன்படி நாளை (வியாழக்கிழமை) அன்னூர், போத்தனூர், ஆனைமலை. 19-ந் தேதி திருப்பூர், அவினாசி, மதுக்கரை மற்றும் தொண்டாமுத்தூர்.
20-ந் தேதி ஆர்.எஸ்.புரம், அனுப்பர்பாளையம், ஒண்டிபுதூர் மற்றும் நெகமம், 22-ந் தேதி மடத்துக்குளம், நல்லூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர். 23-ந் தேதி கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, கிருஷ்ணாபுரம் மற்றும் கோவில்பாளையம், 24-ந் தேதி பாப்பநாயக்கன்புதூர், பாப்பம்பட்டி, இடையர்பாளையம், கொங்கு மெயின்ரோடு, 25-ந் தேதி கோட்டூர், மேட்டுப்பாளையம், குறிச்சி. 26-ந் தேதி பல்லடம், பொள்ளாச்சி, காந்திமாநகர், 29-ந் தேதி பெதப்பம்பட்டி, சோமனூர், கணபதி 30-ந் தேதி சுல்தான்பேட்டை, சிங்காநல்லூர், சூலூர், ராமநாதபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் டாக்டர் நஞ்சப்பா ரோடு ஆகிய கிளைகளில் மேற்கண்ட மேளா நடைபெறும்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர் பயனாளிகளுக்கு தொடர் வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு செல்லும் போது அரசு வழங்கும் உதவித்தொகை பெற வசதியாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications