கோவை ஆட்சியர் அலுவலகம் முன் எஸ்பி வேலுமணி தர்ணா.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்! 8 எம்எல்ஏக்கள் கைது
கோயம்புத்தூர்: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தர்ணா செய்து வந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவிற்கு வந்தது.

தேர்தல்
இந்த நிலையில்தான் கோவையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை. தேர்தல் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கோவையில் மாநகராட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும், தேர்தலை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வேலுமணி போராட்டம் செய்து வருகிறார்.

திமுக தலையீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது. ஆளும் கட்சி நிர்வாகிகள் பண விநியோகம் செய்கிறார்கள். இதை பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. திமுகவினர் பணம் கொடுப்பதை பற்றி தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பல முறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் அதில் எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புகார்
நேற்று அதிமுகவின் வழக்கறிஞர்கள் அணி சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. பண விநியோகம் செய்யும் நபர்களை பற்றி புகார் அளித்தோம். அதில் நடவடிக்கை இல்லை. அதேபோல் நாங்கள் பிடித்து கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்யாமல். அதிமுகவினர் மீதி தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழக்கு போடுகிறார்கள் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். நேற்று கொடுக்கப்பட்ட இந்த புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று வேலுமணி போராட்டத்தில் குதித்து உள்ளார்.

துணை ராணுவம்
முன்னதாக கோவைக்கு துணை ராணுவம் கோவைக்கு வரவேண்டும் வேண்டும் எஸ்.பி.வேலுமணி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். மக்கள் பயமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றால் துணை ராணுவப்படை குவிக்கப்பட்ட வேண்டும். கரூர், சென்னையிலிருந்து அதிகமான ரவுடிகள் கோவைக்கு வந்துள்ளனர். இதனால் துணை ராணுவப்படை வந்தால் மட்டுமே தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று எஸ்.பி வேலுமணி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இந்த ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வேலுமணி போராடி வருகிறார்.

கைது
எஸ்.பி. வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து 8 எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தர்ணா செய்து வந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications