"Quota" சிஸ்டத்துல நான் வரலை.. ரெண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு வந்தவன்.. அண்ணாமலை டென்ஷன் பேச்சு!
கோவை: தாம் கோட்டா (Quota) சிஸ்டத்துல வரவில்லை.. ரெண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு பொறியியல் படிப்பு படிக்க வந்தவன் என கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக அண்ணாமலை, அதிமுக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகின்றனர்.

கோவையில் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா.. நாங்க 2002-ல் அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) எம்.எல்.ஏ. அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர் சிங்கை ராமச்சந்திரன். அதிமுகவின் வேட்பாளர் தந்தை எம்.எல்.ஏ.- அது வாரிசு அரசியல்.
ஆனால் 2002-ல் முதன் முதலாக நான் கோவைக்கு வந்தேன். பேண்ட் போட்டுகிட்டு எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்னைக்கு எனக்கு வயது 17. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம்.
அப்போது என் அப்பாவிடம், இந்த ஊர் நமக்கு செட் ஆகுமா? நாம எல்லாம் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறோம்.. மொத்தம் 40 வீடு. 3 பஸ் மாறி கோயம்புத்தூர் வந்திருக்கிறோம். பெரிய நகரம் இது. இந்த ஊர் நமக்கு செட் ஆகுமா? பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன். என்னுடைய மனைவி ஒரு ஆண்டு ஜூனியர். பிஎஸ்ஜி கல்லூரியில்தான் படித்தார்.
அதாவது கோட்டா சிஸ்டத்துல இந்த அண்ணாமலை வரலை.. கோட்டா சிஸ்டத்துல வானதி வரலை.. வானதி அக்கா வரலை.. கோவிச்சுக்காதீங்க.. கோட்டா சிஸ்டத்துல மோடி வரலை.. கோட்டா சிஸ்டத்துல இங்க யாரும் வரவில்லை.. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. அண்ணாமலைக்கு ஐபிஎஸ் பதவி கிடைத்ததே ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) எனும் கோட்டாவில்தான் என்பதற்காக தரவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்தும் வருகின்றனர்.
மேலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா கோவிந்தராஜ் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு வயது, அத்துடன் சிங்கை ராமச்சந்திரனின் 13-வது வயதிலேயே அப்பா கோவிந்தராஜ் காலமாகிவிட்டார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications