மீண்டும் முதல் மனைவியுடன் ஜோடியாக மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்ப ஜாய் கிரிஸில்டா?
கோவை: உணவுத்தொழில், சினிமா, தொலைக்காட்சி என்று கோவை மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பாக இயங்கி வருகிறார். பிரபலம் ஆகிவிட்டாலே பிராலங்களும் வரிசை கட்டத்தானே செய்யும். அந்த வகையில் ரங்கராஜ் தன் முதல் மனைவி ஸ்ருதியை பிரிந்து, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இது சர்ச்சையான நிலையில், ரங்கராஜ் தன் முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.
கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரின் தந்தை தங்கவேலு சாதாரண சமையல்காரராக இருந்து, பிறகு கேட்டரிங் நிறுவனம் நடத்தி வந்தார். கோவையில் தங்களுக்கு என்று தனித்த அடையாளத்தை உருவாக்கியிருந்தனர். ரங்கராஜ் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்ற பிறகு மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனத்தை சர்வதேச அளவுக்கு எடுத்து சென்றார்.

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை
சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல விவிஐபி குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மாதம்பட்டி கேட்டரிங் தான் உணவு தயாரிக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்தியா அளவுக்கு மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி கேட்டரிங் விருந்து படைக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் ரங்கராஜ் அமெரிக்காவில் ஹோட்டல் தொடங்கியுள்ளார்.
கேட்டரிங் நிறுவனம் மட்டுமல்லாமல் ரங்கராஜ் சில படங்களிலும் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவர், தனியார் தொலைக்காட்சியின் சமையில் நிகழ்ச்சிக்கு நடுவராக தேர்வானார். வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கிடைத்த வெளிச்சம் ரங்கராஜை பிரபலமாக்கிவிட்டது. இந்நிலையில் சமீபகாலமாக அவர் குறித்து பல்வேறு சர்ச்சைகளிலும் வெடிக்க தொடங்கியுள்ளது.
இரண்டாவது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜ்க்கு, கோவையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஸ்ருதி வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.
ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவருடன் நெருங்கி பழகி வந்தனர். ஜாய் கிரிஸில்டாவும் ரங்கராஜ்டன் காதலர் தினம் கொண்டாடியதாக எல்லாம் பதிவு போட்டிருந்தார். உச்சபட்சமாக கடந்த மாதம் ஜாய் கிரிஸில்டா கடந்த மாதம் தன் சமூகவலைதள பக்கத்தில், ரங்கராஜை திருமணம் செய்துவிட்டதாகவும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
மீண்டும் முதல் மனைவியுடன்
திருமணம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ததால் ரங்கராஜ் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் இரண்டாவது திருமணம் தொடர்பாக ரங்கராஜ் எந்த பதிவையும் போடவில்லை. ஸ்ருதி, ஜாய் இருவருமே தங்கள் சமூகவலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி என்று பயோ வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மனைவி ஸ்ருதியுடன் இணைந்து கலந்து கொண்டார். ராம்ராஜ் நிறுவனத்தின் கோவை கொடிசியா வளாகத்தில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் ரங்கராஜ், முதல் மனைவி ஸ்ருதியின் அருகில் அமர்ந்திருந்தார்.
விமர்சனம்
ஆனாலும் அவர் ஸ்ருதியிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ருதியின் முகத்தை கூட பார்க்காமல் ரங்கராஜ் தவிர்த்ததாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த புகைப்படம், வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைவைத்து நெட்டிசன்கள் பலரும் மாதம்பட்டி ரங்கராஜை மீண்டும் விமர்சித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications