தாரைதாரையாக கண்ணீர்.. ஈஷாவில் மகா சிவராத்திரி.. ராஜ்நாத் சிங் முதல் தமன்னா வரை மனமுறுகிய பிரபலங்கள்
கோவை: கோவையில் வெள்ளையங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணையமைச்சர் எல் முருகன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அதிமுகவின் எஸ்பி வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்று மனமுருகி வேண்டினர். அதோடு, பக்தர்கள் பலரும் கண்ணீருடன் மனமுருகி சிவனை வழிபாடு செய்த நிலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
‛மகா சிவராத்தி'தினத்தில் கண்விழித்து சிவனை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இதனால் மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வணங்கி பிரார்த்தனை செய்வார்கள். அந்த வகையில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவன் கோவில்களில் வழிபாடு
வழக்கம்போல் மகா சிவராத்திரை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே விழித்திருந்து சிவனை வழிபட்டு வருகின்றனர். பலர் சிவாலயங்களுக்குச் சென்று இரவு முழுவதும் மற்ற பக்தர்களோடு சேர்ந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஈஷாவில் கொண்டாட்டம்
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் கோவை அருகே வெள்ளையங்கிரியில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு சிறப்பு ஏற்பாடுகளுடன் மகாசிவராத்திரி விழா இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்கேற்ற பிரபலங்கள்
இந்த சிவராத்திரி விழாவையொட்டி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணையமைச்சர் எல் முருகன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அதிமுகவின் எஸ்பி வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்று மனமுருகி வேண்டினர்.
பக்தர்கள் கண்ணீர்
ஓம் நமச்சிவாயஎன்று கண்களை மூடி மனமுருகி வேண்டினர். ஆதியோகியின் பிறை நிலவு, சர்ப்பம், நெற்றிக்கண், ஆதியோகியின் திவய தரிசனம் உள்ளிட்டவை ஒளிவடிவில் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மனமுருகி கண்ணீர் மல்க வழிபாடு செய்தனர்.
ஆன்மிக இசை - விருது
பக்தர்கள் மத்தியில் ஜக்கி வாசுதேவ் ஆன்மிக உரை நிகழ்த்துவதோடு, பக்தர்களை குதுகலப்படுத்துவதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடிகைகள் தமன்னா, சாரா அர்ஜுன், ஜக்கிவாசுதேவ் உள்பட பலரும் நடினமாடினர் சிவராத்திரியை கொண்டாடினர். பக்தர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததோடு, உற்சாகத்தில் நடனமாடினர்.
விழாவில் இடம்பெற்ற நெருப்பு நடனம் பக்தர்களை கவர்ந்தது. விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்களுக்கு பவ்ய பாரத் பூஷன் விருது வழங்கப்பட்டது. விண்வெளி துறையின் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பேட்மிண்டன் விளையாட்டு துறையில் சாதித்த சாய்னா நோவல் விவசாயிகளுக்கு கவுரவிக்கப்பட்டனர். நாட்டின மாடுகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications