ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி

Subscribe to Oneindia Tamil

கோவை: டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக இருந்து வரும் காலி மதுபாட்டில் வசூல் மற்றும் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் காலி பாட்டில்களை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், மதுபான உற்பத்தி நிலையங்களிலேயே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் அமைச்சர் விக்னேஷை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், டாஸ்மாக் துறை பல ஆண்டுகளாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த நிலையை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

major-reforms-coming-to-tasmac-no-need-to-handle-empty-bottles-from-june-says-minister-vignesh

ஜூன் மாதத்திற்குள் காலி மது பாட்டிலை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றோம் எனவும், மது பாட்டிலில் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல், மதுபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பார் நடத்துபவர்களை எந்தெந்த இடத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும். மதுவிலக்கு துறை தான் இருப்பதிலேயே புறக்கணிகப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக இருக்கிறது.

டாஸ்மாக் துறை என்றால் அதை பார்ப்பதிலேயே ஏளனமாக பார்க்கிறார்கள். எனக்கே இப்படி என்றால் உங்களுக்கு குழந்தைகள் எங்க அப்பா டாஸ்மாக்கில் வேலை செய்கின்றார் என்று சொல்வது கஷ்டமாக இருக்கும் எனவும். டாஸ்மாக் ஆரம்பித்ததன் நோக்கமே கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டும். மக்கள் வேறு பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

வருவாய் மட்டுமே என்பது நோக்கம் அல்ல. 23 ஆண்டுகளாக டாஸ்மாக் என்றாலே சம்பாதிப்பதற்கும், தவறு செய்வதற்கு மட்டும்தான் இந்தத் துறை என்று மாற்றிவிட்டார்கள். பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கினாலும், அந்த பாட்டிலில் இருந்து 1 ரூபாய், அல்லது 1.5 ரூபாய் உங்களுக்கு வரும். மற்றவை வேறு யாருக்கோ செல்கிறது.

மற்றவர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பழி வாங்குவது நீங்கள் தான். அதனால்தான் முதலில் பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிக்க வேண்டும். பலர் இதை தவறாக புரிந்து கொண்டார்கள். நீங்கள் வந்த உடனேயே பத்து ரூபாய் வாங்கத்தானே செய்கின்றார்கள் என்கிறார்கள். நாம் டெபாசிட் அமௌன்ட் ஸ்டிக்கருக்கு பத்து ரூபாய் வாங்க வேண்டும். அதற்கு மேல் 10 ரூபாய் வாங்க கூடாது.

ஜூன் மாதத்திற்குள் அந்த டெபாசிட் தொகையையும், பாட்டிலையும் நீங்கள் கையில் வாங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கவும், பாட்டிலில் ஸ்டிக்கரை ஊழியர்கள் ஒட்டாமல் மதுபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை. எந்த நோக்கமும் இல்லை. தமிழகத்தில் உள்ள 4,600 பார்களையும் நானே எடுத்துக் கொண்டு, 3600 பார்களை மற்றவர்களுக்கு கொடுப்பேன் என எதுவும் இந்த ஆட்சியில் இருக்காது. இதுபோன்ற தவறுகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார்.
அமைச்சராகி இந்த எட்டு நாட்களாக நன்றாக படித்திருந்தால், ஐஏஎஸ் கூட ஆகியிருப்பேன். எட்டு நாட்களாக அவ்வளவு விஷயங்கள் படித்திருக்கிறேன்.

டாஸ்மாக் உருவான காலத்தில் இருந்து, முன்பு எப்படி இருந்தது, எப்படி எல்லாம் மாறி இருக்கின்றது என்பது முதல் படித்து இருக்கின்றேன். மது குடிப்பவர்களை மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களையும் இது பாதித்து இருக்கிறது. குடிப்பவர்கள் மதுவிற்கு அடிமையானது போல நமது ஆட்கள் சில விஷயங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அவர்களையும் மீட்க வேண்டிய நிலை வேண்டி இருக்கிறது.

அது நிச்சயம் நடக்கும். அரசுக்கு வருவாய் மட்டுமல்ல, ஒரு கண்ணியமான துறையாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல சக தொழிலாளர்கள் பார்க்கும் வகையில் டாஸ்மாக் துறையை செயல்படுத்துவோம் என்று ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் விக்னேஷ் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+