கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம் போட்டு காட்டினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ

    கோயம்புத்தூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம் போட்டு காட்டினார்.

    இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.

    Makkal Needhi Maiam Chief Kamal Haasan shows a short film in Kovai rally

    அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவதை போலவே இவர் இதில் வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடம் விளக்கம் அளித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசிய வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டார். ''1000 பேர் சாக வேண்டியது, 13 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்'' என்று தமிழிசை கூறிய வீடியோவை ஒளிபரப்பினார்.

    தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்

    அதேபோல் எச்.ராஜா பேசிய வீடியோவும் தன்னிடம் இருக்கிறது, ஆனால் அவர் அட்மீன் மீது பழி போடுவார், என்று கூறி கமல்ஹாசன் கிண்டல் செய்தார். அதேபோல் மெரினாவில் போலீஸ் செய்த கலவரம் குறித்தும் வீடியோ வெளியிட்டார்.

    இதே போல் வரிசையாக நிறைய புகைப்படங்களை, அரசுக்கு எதிரான போராட்ட வீடியோக்களை வெளியிட்டார். இறுதியாக, அதிமுகவும், பாஜகவும் நம்மை இவ்வளவுதான் மதிக்கிறது, இவர்களுக்காக உங்கள் வாக்கு என்று கமல்ஹாசன் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

    English summary
    Makkal Needhi Maiam Chief Kamal Haasan shows a short film in Kovai rally, Just like big boss show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X