ஏனுங்.. அது நம்ம கமல்ஹாசன்தானுங்.. வியந்து போன பெண்கள்.. காலையிலேயே "ஸ்வீட் சர்ப்ரைஸ்.." கோவையில்
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் காலையில் வாக்கிங் சென்றவர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் காத்திருந்தது.
Recommended Video

அங்கே நடந்து சென்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும்.. ஏனுங்க.. இது "நம்ம கமல்ஹாசன் மாதிரி இருக்கு இல்ல.." என்று முக கவசம் அணிந்து நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரை நோக்கி உற்று உற்றுப் பார்த்துப் பேசிக் கொண்டனர்.
"இல்லிங்கோ.. அது "நம்மவரேதானுங்கோ" என்று ஒரு பெண் உறுதியாக சொல்ல.. மற்ற பெண்களின் புருவங்கள் வியப்பில் மேல்நோக்கி போயின.

கமல்ஹாசன்தான்
முகக் கவசத்திற்கு மேலே, ஒளிரும் முகத்தை திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டனர் அந்தப் பெண்கள்.. ஆம் அது கமல்ஹாசனேதான். இன்று காலங்காத்தாலே.. ரேஸ்கோர்ஸ் சாலையில் வாக்கிங் செல்வதற்கான உடைகளை அணிந்து கொண்டு, முகக் கவசம் அணிந்தபடி கைவீசி கொண்டு நடந்து கொண்டிருந்தார் கமல்ஹாசன். அதை சில பெண்கள் வியந்து உற்றுப் பார்க்கக் கூடிய புகைப்படம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பிரச்சினைகளை கேட்டறிந்தார்
வாக்கிங் செல்வது தனது உடல் நலத்துக்கு நல்லது ஓகே.. ஆனால் ஒரு அரசியல்வாதியாக.. இந்த சமூகத்திற்கு நல்லது நடக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார் கமல்.. வாக்கிங் சென்றபோது அங்கே உடன் வந்த மக்களோடு மக்களாக கலந்து.. அவர்களிடம் உங்களுக்கு என்னதான் பிரச்சனை இருக்கிறது சொல்லுங்கள்.. மக்கள் நீதி மய்யம் அதை தீர்த்து வைக்கும் என்று சொன்னார் கமல்.

மக்களிடம் கலந்துரையாடினார்
இவ்வாறு கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த வெள்ளம் போல் ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை சொல்லத் தொடங்கினர். அனைவரிடமும் பொறுமையாக நின்று கேட்டுக்கொண்டு அதற்கு, தன் தரப்பில் என்ன தீர்வு வைத்துள்ளேன் என்ற பதிலையும் சொன்னார் கமல்ஹாசன். இது சந்திப்பு நிகழ்ந்து திரும்பிப் போகும்போது பொது மக்களிடம் அப்படி ஒரு மனநிறைவு.. முகத்தில் மலர்ச்சி இருந்ததை பார்க்க முடிந்தது.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் களமிறங்குகிறார் என்றதுமே அங்கு அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் இந்த தொகுதியில் மூன்றாவது இடம் பிடித்து சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கியிருந்தார்.

உங்க ஊர்க்காரர்
எனவே தனக்கான களம் இது தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், அவர் மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம் சென்னையில் இருந்து இங்கே வந்து போட்டியிடுகிறார் என்பதுதான். அவர் ஜெயித்துவிட்டால் சென்னைக்கு போய் விடுவார்.. அவர் வெளியூர்காரர்.. என்று இதுபோன்ற விமர்சனங்களை தான் முன்வைக்கிறார்கள் எதிர்தரப்பினர். இதை உடைத்து தூள் தூளாக்கும் முயற்சியில் மக்களோடு மக்களாக இன்று காலையிலேயே கலந்து விட்டார் கமல்.

வாக்கிங்
"நான் உங்களில் ஒருவன்.." என்று சொல்வதுபோல அதே ஏரியாகாரர் போல வாக்கிங் சென்றுள்ளார். பொதுவாக விருந்துக்கு வந்தவர்கள் வாக்கிங் செல்வதில்லை. அதே ஏரியாக்காரர்கள் தான் உரிமையோடு வாக்கிங் செல்வார்கள். இது உளவியல். அதை சரியாக கையிலெடுத்து, நான் உங்கள் ஏரியாக்காரர். கோவை கொங்கு தமிழ் பேசும் உங்கள் வீட்டுப்பிள்ளை.. என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் கமல்ஹாசன்.. இனிமேல் ஒவ்வொரு நாளும் கமலஹாசனின் அதிரடிகள் தொடரும் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், மகிழ்ச்சியோடு.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications