பணம் தர மாட்டீயா? மதுவில் சயனைடு.. மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகன்.. பொள்ளாச்சியில் பயங்கரம்
கோயம்புத்தூர்: சொந்த தொழில் தொடங்க மாமனார் தனக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மருமகன், மதுவில் சயனைடு விஷம் கலந்து கொடுத்து அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பணப்பட்டி அருகே உள்ள சூலூரைச் சேர்ந்தவர்கள் மனோகரன் (66). கூலித் தொழிலாளரி. இவர் தனது நண்பர் வேலுச்சாமி (63) என்பவருடன் சேர்ந்து சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளார்.
இதில் சிறிது நேரத்தில் இருவரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அவர்கள் எப்படி இறந்தனர்? அவர்கள் குடித்தது போலி மதுபானமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

வலுத்த சந்தேகம்
இதில் கடந்த மாதம் தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை மனோகரன் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் யாராவது மனோகரனை கொலை செய்து இருப்பார்களா என்ற ரீதியில் போலீஸார் விசாரிக்க தொடங்கினர். இதையடுத்து, மனோகரனின் மனைவி, மகள் மற்றும் மருமகன் சத்யராஜ் ஆகியோரிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மருமகன் திடுக்கிடும் வாக்குமூலம்
இதில் சத்யராஜ் மட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்களை சத்யராஜ் கூறினார். போலீஸாரிடம் அவர் கூறியதாவது:
நான் பல ஆண்டுகளாக சொந்த தொழில் தொடங்குவதற்கு பணம் வேண்டும் என மனைவி குடும்பத்தாரிடம் கேட்டு வந்தேன். அவர்களும் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என நாட்களை கடத்திக் கொண்டே சென்றனர்.

தீர்த்துக் கட்ட முடிவு
இந்த நிலையில் தான், எனது மாமனாருக்கு நிலம் விற்றதன் மூலம் 40 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தில் சிறிது எனக்கு தருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதையடுத்து நானே அவரிடம் சென்று பணம் கேட்டேன். ஆனால் பணம் தர முடியாது என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். யாருக்கும் சந்தேகம் வராமல் எப்படி கொல்வது என இணையதளங்களில் தேடி பார்த்தேன்.

சயனைடு ஆர்டர்
அப்போது சயனைடு கொடுத்தால் விஷயம் வெளியே தெரியாது என அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் சயனைடை ஆர்டர் செய்து வரவழைத்து அவர் குடிக்கும் மதுவில் கலந்துவிட்டேன். ஆனால் அவர் தனது நண்பருடன் சேர்ந்து குடித்தால் அவரும் இவருடன் சேர்ந்து இறந்துவிட்டார். இவ்வாாறு சத்யராஜ் வாக்குமூலம் அளித்தார்.
அவரது வாக்குமூலத்தின் பேரில் சத்யராஜை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications