Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலைக்கு எதிராக பாஜகவே பார்த்த வேலை.. என்ன இவர் இப்படி அடிச்சு சொல்லுறாரே.. அப்போ கோவை?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூரில் தோல்வி பயத்தில் அண்ணாமலை பேசுகிறார். அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றுவிடுவார். 1 லட்சம் வாக்குகள் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஆனால் தெரிந்துவிடும். அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் இப்படி பேசுகிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை , "கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியுள்ளனர் எனத் தெரியவில்லை, என்று கூறினார்.

Many in BJP itself are against Annamalai in Coimbatore Lok Sabha election

பேட்டி: இது தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அதிமுக சரியாக வேட்பாளர் போடவில்லை. பணமும் செலவு செய்யவில்லை. பாஜக கூட பணம் கொடுத்தது. அண்ணாமலை கூட பணம் கொடுத்தார். அவர் வேண்டுமானால் பேசலாம். எல்லா தொகுதிக்கும் அவர்கள் பணம் கொடுத்தது உண்மை. 6 தொகுதிகளை பாஜக குறி வைத்தது. அவர்களுக்கு 25 கோடி ரூபாயை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 500 கோடி ரூபாயை இறக்கி உள்ளனர். திமுகவும் பணம் கொடுத்தது.

அதிமுக சேலத்தில் பணம் கொடுத்தது. கள்ளக்குறிச்சியில் பணம் கொடுத்தது. அண்ணாமலை தோல்வி பயத்தில் வாக்காளர்களை காணவில்லை. வாக்காளர் பட்டியலை அவர்தான் சோதனை செய்திருக்க வேண்டும். திமுக அதை சோதனை செய்கிறது. ஆனால் பாஜக சோதனை செய்யவில்லை. இந்த முறை அதிமுகவும் சோதனை செய்யவில்லை.

இதை திமுக மட்டுமே வழக்கமாக சோதனை செய்து வருகிறது. அதனால் அவர்கள் நீக்கப்பட்டவர்கள் பெயர்களை உடனே கண்டுபிடித்தனர். தோல்வி பயத்தில் அண்ணாமலை இப்படி எல்லாம் பேசுகிறார். அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றுவிடுவார். 1 லட்சம் வாக்குகள் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஆனால் தெரிந்துவிடும். அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் இப்படி பேசுகிறார்.

ஒருவருக்கு வாக்கு இல்லையா என்பதை ஆன்லைனில் எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். அதுவும் கோவை போன்ற இடங்களில் இப்படி எல்லாம் நடக்காது. கோவையில் அதிமுக - திமுக இணைந்து செயல்படுவதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அண்ணாமலை அங்கே வருவதை பாஜகவினரே விரும்பவில்லை.

வானதி சீனிவாசன் அவர் ஆட்களே இதை விரும்பவில்லை. அரசியலில் அக்கா - தம்பி, அண்ணன் தம்பி எல்லாம் இல்லை. அங்கே அண்ணாமலை ஜெயித்தால் வானதிக்கு சிக்கல் ஆகிவிடும். அண்ணாமலை பவர் வந்துவிடும். இதை வானதி விரும்ப மாட்டார். இதன் அண்ணாமலைக்கு எதிராக திமுக மட்டும் இல்லை. வானதியே அண்ணாமலைக்கு எதிராக இருக்கிறார். அண்ணாமலை கூடவேதான் வானதி இருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறார். ஆனால் அவர் அண்ணாமலைக்கு எதிராக உள்ளார். அங்கே பெரிய உள்ளடி போய்க்கொண்டு இருக்கிறார். வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் இல்லை.

நீங்கள் ஆளுமையாக இருக்கும் ஏரியாவில் வேறு ஆள் வந்து நின்றால் விட மாட்டார்கள். மோடி மீண்டும் வந்தால் இவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க இவரின் லோக்கல் அரசியல் காலி ஆகலாம். இதை எல்லாம் வானதி யோசித்து பார்ப்பார். அண்ணாமலையை எப்படி வானதி விடுவார்., என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

விளக்கம்: முன்னதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் இது பற்றி அளித்த விளக்கத்தில், கோயம்புத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான தெளிவாக்கம் பின்வருமாறு:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு க்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க
வழிவகை உள்ளது.

இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம் 6T60T மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலை தலைவர் .கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+