மருதமலை முருகன் கோயில் செல்ல இ பாஸ் தேவையா? கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கோவை: தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று மருதமலை முருகன் கோயில். முக்கிய நாட்களில் இந்த கோயிலுக்குப் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இதற்கிடையே மருதமலை கோயிலுக்கு வருவோருக்கு இ பாஸ் தேவை என்று தகவல் பரவிய நிலையில், கோயில் நிர்வாகம் இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை அறுபடை வீடுகளாகக் கருதப்படுகிறது.

முருகன் கோயில்: அதேநேரம் இந்த அறுபடை வீடுகளைத் தாண்டியும் பல முருகன் கோயில்கள் உலகளவில் பிரசித்தி பெற்று உள்ளன. அதன்படி கோவையில் அடுத்துள்ள மருத மலைக் கோயில் முக்கியமானது. தை பூசம் உள்ளிட்ட நாட்களில் மருதமலையில் கூட்டம் நிரம்பி வழியும். இதற்கிடையே இந்த கோயிலுக்கு வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம்.
மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அதிலும் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியாகச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் நிரம்பி வழியும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ளதால் மருதமலை கோயிலில் பார்கிங் இடம் குறைவாகவே இருக்கிறது.
கூட்டம் அதிகம்: வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் அதிக பக்தர்கள் வருவதால் பார்கிங் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக கார்களில் வருவோர் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால், இப்போது நான்கு சக்கர வாகனங்கள் வர வேண்டாம் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பக்தர்கள் படியேறி வர வேண்டும் அல்லது கோயில் பஸ் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டம்: இதற்கிடையே மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் வருவோருக்கு இ பாஸ் முறையைக் கொண்டு வருவது குறித்து இப்போது ஆலோசனை நடக்கிறது. இதன் மூலம் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 வாகனங்களும், மதியம் 1 மணி மாலை 6 மணி வரை 150 வாகனங்களும் இ பாஸ் வழங்கவும் கோயில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.. வழக்கம் போல இந்த இ பாஸ் கோயில் இணையதளத்தில் பெறும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துக் கேட்பு: இந்த புதிய முறை குறித்து மக்களிடையே கோயில் நிர்வாகம் கருத்துகளைக் கேட்கிறது. மக்கள் தங்கள் கருத்துகளை நேரில் அல்லது 0422-2422490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டுதெரிவிக்கலாம். அல்லது, அறநிலையத்துறை இணையதளம் அல்லது மருதமலை கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
அதேநேரம் இந்த அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேவையான கார் பார்கிங்கை உருவாக்குவதற்குப் பதிலாக, பொதுமக்கள் வரக் கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயம் இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கும்படி இல்லை என்றும் இது இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications