கோவை மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம் – நாளை முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமை பெற்றது கோவை. குறு சிறு நிறுவனங்களின் முதுகெலும்பாக கோவை உள்ளது. கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மருதமலை கோயில் உள்ளது. அங்கு நாளை முதல் அதிரடி மாற்றம் நிகழ போகிறது. பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேசவும், வீடியோ போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. [Maruthamalai]
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு கிட்டத்தட்ட அறுபடை வீடுகளுக்கு இணையான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் இதை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

மருதமலை கோயிலில் மாற்றம்
தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வார விடுமுறை நாட்களில் மலைப் பகுதிக்கு கார்களில் செல்ல தடை உள்ளது. தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கோவை மாவட்டம், மருதமலை கோயில் வரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
செல்போன் பயன்படுத்த தடை
ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள், கைப்பேசி (செல்போன்) பேசவும். புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. செல்போன் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது கைப்பேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு உள்ளே வரவும்.
இந்த நடவடிக்கைக்கு அனைத்து பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து, ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் மருதமலை செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆத்திர அவசரத்திற்கு யாரையும் தகவல் தொடர்பு கொள்ள முடியாது" என மக்கள் கூறுகிறார்கள்.
காரணம்
ஆனால் மருதமலை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதில் சிலர் போட்டோ எடுக்கிறோம் என்று பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்கள். யூடியூபர்களின் அட்ராசிட்டியும் அதிகரித்து வருகிறது. அதனால் கோயிலின் மாண்பை காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications