மருதமலை 184 அடி முருகன் சிலைக்கு சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை மாவட்டத்தில் பிரபல மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயரத்தில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். உலகத்திலேயே பெரிய முருகன் சிலையாக இது அமையவுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்துக்கு புதிய அடையாளம் வரப்போகிறது என இதை முருக பக்தர்கள் வரவேற்றனர். அதேநேரத்தில் சூழல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பிரச்சனையும் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் வனத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவை கொடுத்துள்ளது.

கோவை மாவட்டம் தொழில்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ஐடி துறையிலும் கோவை முன்னேற்றம் அடைந்து வருகிறது. பல வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சார்ந்த நிறுவனங்கள் கோவையில் தங்கள் அலுவலகத்தை தொடங்கியுள்ளனர்.

maruthamalai-statue-chennai-high-court-asked-explains-from-forest-department-over-maruthamalai-muru

கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், அவிநாசி சாலை மேம்பாலம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச ஹாக்கி மைதானம், மேற்கு புறவழிச்சாலை, ஐடி பூங்கா, தங்கநகை உற்பத்தி பூங்கா உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.

உலகத்திலேயே பெரிய முருகன் சிலை

சுற்றுலா ரீதியாகவும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகை புரிந்து வருகிறார்கள். ஆன்மிக ரீதியாக கோவை மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக மருதமலை கோயில் உள்ளது. கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மருதமலைக்கு அதிகளவு பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

இந்நிலையில், "மருதமலை முருகன் கோயிலில் உலகத்திலேயே பெரிதாக 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும்." என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் மருதமலை சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதிப்பு

"மருதமலையை சுற்றி யானை, புலி, காட்டு மாடு, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. யானைகள் வலசை பாதையாகவும் மருதமலை இருக்கிறது. அங்கு முருகன் சிலை அமைப்பதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும். எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும்." என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக சூழலியல் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "மருதமலை காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. நீலகிரி - கோவை யானை வழிப்பாதையை இணைக்கும் வழித்தடமாக மருதமலை இருக்கிறது. நீலகிரியில் பிறகு பகுதிகளுக்கு செல்வதற்கும் யானைகள் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றன.

நீதிமன்றம் உத்தரவு

இந்த சிலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. எனவே முருகன் சிலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்." என்று முரளிதரன் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க, தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+