"ஒத்த ஓட்டு ஓட்டைவாய்" இதுதான் சம்மந்தம்.. வம்புக்கு இழுத்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

கோவை: ஊழல் அமைச்சருக்கும், உள்துறைக்கும் என்ன சம்மந்தம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த விமர்சனத்திற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - அண்ணாமலை இடையிலான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணாமலை தெரிவித்து வரும் கருத்துகள், இருவருக்கும் இடையேயான மோதலை அதிகப்படுத்தி வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் இரு தரப்பினர் இடையில் தனிப்பட்ட தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி

அண்ணாமலை - செந்தில் பாலாஜி

இதனால் கோபமடைந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்று விமர்சித்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் பாஜக பந்த் நடத்தப்போவதாக அறிவித்து பின்னர் பாஜக பல்டி அடித்த நிலையில், நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கட்சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும்.

அரசியல் கோமாளி

அரசியல் கோமாளி

நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை எனக் கூறுவது என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என கடுமையான தெரிவித்தார். இது இருவருக்கிடையிலான மோதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.

என்ன சம்மந்தம்?

என்ன சம்மந்தம்?

இந்நிலையில் செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கும் சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி பதிலடி

செந்தில் பாலாஜி பதிலடி

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

ஒத்த ஓட்டு ஓட்டைவாய்

ஒத்த ஓட்டு ஓட்டைவாய்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+