முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு; கோவையை சுற்றி சுற்றி வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

கோவை: பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை கோவை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்ட வரவேற்பை கொடுக்க காத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

கடந்தவாரம் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சரை வரவேற்க ஒரு லட்சம் பேராவது திரள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டத்தை முடித்த கையோடு கோவைக்கு விமானம் ஏறிய செந்தில்பாலாஜி, இன்று முழுவதும் கோவையை சுற்றி சுற்றி வந்து முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

 முதலமைச்சர் வருகை

முதலமைச்சர் வருகை

கோவை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கவும், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கோவைக்கு செல்கிறார். இதுவரை அந்த மாவட்டத்துக்கு என பொறுப்பு அமைச்சர் இல்லாததால் அருகாமை மாவட்ட அமைச்சர்களான வெள்ளக்கோவில் சாமிநாதன், ஈரோடு முத்துச்சாமி, இளித்துறை ராமச்சந்திரன் போன்றோர் தான் முதல்வரை வரவேற்று அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்நிலையில் இப்போது மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலுக்காக களமிறக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, தன்னை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் அங்கு வருவதால் வரவேற்பில் பிரம்மாண்டத்தை காட்ட விரும்புகிறார். கோவை வ.உ.சி. மைதானத்தில் பந்தல் சிவா அன் கோ மூலம் அலங்கார வேலைகளை செய்திருக்கிறார்.

பலர் மிஸ்ஸிங்

பலர் மிஸ்ஸிங்

இதுமட்டுமல்லாமல் இன்று காலை முதலே அதிகாரிகள், காவல்துறையினர், கட்சியினர் என அடுத்தடுத்து மீட்டிங் மேல் மீட்டிங் நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்வர் நிகழ்ச்சியில் எந்த குளறுபடியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி நடத்திய ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக முக்கியப் பிரமுகர்கள் பலர் மிஸ்ஸிங்.

முக்கியப் பிரமுகர்கள்

முக்கியப் பிரமுகர்கள்

முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.கண்ணப்பன், மற்றும் முக்கியப் பிரமுகர்களான பைந்தமிழ்பாரி உள்ளிட்ட இன்னும் பலர் செந்தில்பாலாஜி நடத்திய கூட்டத்தில் ஆப்செண்ட். இதேபோல் விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செல்ல சென்ற செந்தில்பாலாஜியோடு மாவட்டச் செயலாளர்களையும் காண முடியவில்லை. குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட ஒரிரு நிர்வாகிகள் மட்டுமே செந்தில்பாலாஜியோடு அனைத்து இடங்களுக்கும் சென்றார்கள். மற்றவர்கள் வெளியூர்க்காரரான செந்தில்பாலாஜியின் ஆவர்த்தனம் பிடிக்காமல் ஒதுங்கிக்கொண்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+