அண்ணாமலை நம்பர் 1 முட்டாள்! மட்டரக அரசியல்வாதி! கடுகடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நம்பர் 1 முட்டாள் எனக் கூறி விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அண்ணாமலை மட்டரக அரசியல் செய்கிறார் என்றும் அவர் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கடுகடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு முதல் கைது செந்தில்பாலாஜி கைதாக தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்திருந்த நிலையில் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அண்ணாமலை படித்த முட்டாளாக இருப்பதாகவும் முட்டாள்களிலேயே நம்பர் 1 முட்டாளாக அவர் இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியிருக்கிறார்.

முக்கிய நபர் இல்லை
கோவையில் ஒரு வார்டில் கூட வெற்றிபெறாத பாஜக எதன் அடிப்படையில் எதிர்க்கட்சி ஆக முடியும் என வினவிய அவர் அண்ணாமலை பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே தாம் கருதுவதில்லை எனத் தெரிவித்தார். வெறும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக விமர்சித்தார். அண்ணாமலையை ஊடகங்கள் தான் முக்கிய நபராக காட்டுவதாகவும் பேட்டிகளின் போது தன்னிடம் எது மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்பதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி பாடம் எடுத்தார்.

தொழில் தலைநகரம்
தமிழகத்தின் தலைநகராக சென்னை விளங்கினாலும் கூட தொழில்துறையின் தலைநகராக கோவை திகழ்வதாகவும் கோவையை இன்னும் வளர்ச்சி அடைய வைப்பதற்கான செயல்திட்டங்களோடு அதை நோக்கி தாங்கள் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதனால் மட்டரக அரசியல்வாதி சொல்லும் கீழ்த்தரமான கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

எதிர்க்கேள்வி
இதனிடையே அங்கிருந்த நிருபர் ஒருவர் ஏதோ கேட்க, அவரிடம் திருப்பி எதிர்க்கேள்வி கேட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. மொத்தத்தில் அண்ணாமலை மீது ஏக கோபத்தில் இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர்கள் இருவருமே கரூர்காரர்கள் என்பதும் இப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications