விளம்பரம் தேடுவோருக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்கமாட்டேன்! அண்ணாமலை பற்றி செந்தில்பாலாஜி சூசகம்!
கோவை: விளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பதில் சொல்லி தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் மின்சார வாரியம் தொடர்பான புகார்களை பெறும் தனி அலுவலகத்தை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
அண்மையில் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
பி.ஜி.ஆர். நிறுவன டெண்டர் விவகாரத்தில் உரிய ஆவணங்களை அளித்தால் தாம் விளக்கம் அளிக்கத் தயார் என்றும் ஆனால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் விளம்பரம் தேடுவதற்காக மட்டும் பேசுவதற்கெல்லாம் பதில் கூறி தமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மனதில் வைத்து இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் அவர்.

பி.ஜி.ஆர். நிறுவனம்
பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது கடந்த அதிமுக ஆட்சியில் தான் என்றும் இதனை மீண்டும் மீண்டும் தாம் கூறியும் விளம்பரத்திற்காக சிலர் திரும்ப திரும்ப அதையே பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரத்துடன் யார் வந்தாலும் தாம் பதில் அளிக்க தயார் இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையாளர் நேரம்
அதேபோல் பத்திரிகையாளர்களின் நேரமும் மிக முக்கியமானது என்பதால் இது போன்ற விளம்பர பிரியர்களுக்காக அவர்களும் தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது தனது கோரிக்கை என்றும் உண்மையிலேயே ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறோம் என்றால் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டுமல்லவா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சூசகமாக அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.
Recommended Video

பிளாக் லிஸ்ட்
பி.ஜி.ஆர். நிறுவனத்தை பொறுத்தவரை பிளாக் லிஸ்டில் வைக்கப்படாத நிறுவனம் என மிகத் திட்டவட்டமாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். இதனிடையே இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications