டாஸ்மாக்கை மூடினால் வேலை காலி.. சட்டம் கட்டாயம் பாயும்! ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

கோவை: டாஸ்மாக் ஊழியர்கள் இன்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலைஇயில், இன்று டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், சட்டம் கட்டாயமாக பாயும் எனவும், 960 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். டாஸ்மாக் கடையை மூட சொல்லிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என எச்சரித்துள்ளார் அமைச்சர் விக்னேஷ்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டிலை திரும்ப பெரும் திட்டத்தை அமல்படுத்தி அதற்கான 10 ரூபாயை எம்ஆர்பி விலையில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

TASMAC Employees Protest

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.இதனால் கடை ஊழியர்களுடன் குடிகாரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை குறித்த நேரத்தில் (மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை) திறக்க வேண்டும் எனவு, விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் இன்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையேம் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," மாற்று பணியாளர்களை வைத்து டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்து உள்ளோம். பாட்டில்களை திரும்ப பெறுவதில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

மது பாட்டில்களை திரும்ப பெற 40,048 இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட். 4,040 கடைகளில் 460 கடைகள் நேற்று அடைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக்கை அடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே எம்.ஆர்.பியில் ரூ.10 சேர்க்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

டாஸ்மாக் துறையினால் நானும் கொஞ்ச நாள் தூங்கமால் இருந்து உள்ளேன். மதுபாட்டில்களுக்கு MRP கொடுக்க வேண்டும். மது பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். ஊழியர்கள் போராட்டம் பண்ணக் கூடாது மீறினால் அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 960 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். கடையை மூட சொல்லிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். டாஸ்மாக் வேலை நிறுத்தத்தால் நேற்று 10 லட்சம் பேராவது குடிக்காமல் ரூ.250 வீட்டுக்கு கொடுத்து இருப்பாங்கனு தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம் தான். 4,800 கோடியில பாதி தான் திரும்ப வருது மீது எங்க போச்சு? யாருகிட்ட போச்சு? பார்டி ஃபண்டை விட அதிகமான ஊழல் இது தான்.. இதை டைவர்ட் பண்ணதான் அரசு பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குதுன்னு சுத்தி விட்டுகிட்டு இருக்காங்க. நான் கடந்த கால டாஸ்மாக் அமைச்சர்கள் மாதிரி இருந்திருந்தா இவ்ளோ பிரச்சனையே இருந்திருக்காது " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+