ஜெம் வீரமணி வழக்கு: பிரகாஷ் பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியா கொண்டு வர தீவிர ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் வீரமணி கைது செய்​யப்​பட்​டார். அவரது குற்​றச் செயல்​களுக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் உள்பட மேலும் 8 பேர் கைது செய்​யப்​பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் பிரகாஷை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜெம் வீரமணி தனது குற்​றங்​களை மறைக்க முயற்​சித்​த​போது அவருக்கு சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகளை விற்​பனை செய்ய​வும், அதன்​மூலமாக கிடைத்த தொகையில் பாலியல் வழக்கை மூடி மறைக்​கவும் உதவிய​தாக பிரபல ரயில்வே தொழிற்​சங்க தலை​வரின் மக​னான தொழிலதிபர் பிரகாஷ் மீதும் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

Veeramani

இந்​நிலை​யில், அவர் வெளி​நாடு தப்​பிச் சென்​றார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, இந்​தி​யா​வுக்கு அழைத்து வரும் நட​வடிக்​கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீ​சார் முடுக்கி விட்​டுள்​ளனர்.

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசர், கணேசன், பாபு, பார்த்திபன் மற்றும் சக்திவேல் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில், 3 வழக்குகளில் ஜெம் வீரமணியும், மேலும் ஒரு வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசர் ஆகியோரும் அக்டோபர் 28-ந் தேதி சம்பிரதாய கைது (Formal Arrest) செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் குற்ற வழக்கு எண் 11/2026 தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி மூலம் குற்றம்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பு புழல் மத்திய சிறையில் நடைபெற்றது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாகக் கணேசனின் சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டிலும், நீலாங்கரையில் சாந்தி நடத்தி வந்த நாட்டியப் பள்ளியிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜெம் வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக லுக் அவுட் சுற்றறிக்கை (Look Out Circular - LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயன்றபோது அவருக்கு உதவிய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் விரைவாகப் புலன் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெம் வீரமணியின் வீட்டுக்குச் சிறுமிகளை அழைத்து வருவது தெரிந்தும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக அவரது வீட்டு காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+