Cyclone Akvan: அக்வான் புயல் எங்கே? தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்வான் புயல் நாளை பிற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - டுனி கடற்கரையில் கரையை கடக்கும் நிலையில் இன்று எங்கெல்லாம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய அக்வான் புயல், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை அதே பகுதியில் நிலவி வருகிறது.

weather cyclone akvan

இந்த தீவிர புயல் மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20ஆம் தேதி பிற்பகல் ஆந்திராவின் நரசாபூர் டூ புரி இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ.வேகத்திலும் இடையிடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயல் நரசாபூரில் இருந்து தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் கலிங்கபட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கு பகுதியில் 560 கி.மீ. தூரத்திலும் கோபால்பூரின் தெற்கு பகுதியில் 600 கி.மீ. தொலைவிலும் , ஒடிஸாவின் புரி பகுதியின் தெற்கே 660 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இந்த புயலுக்கு அக்வான் என்ற பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்தது. அக்வான் என்றால் பாரசீக மொழியில் அரக்கன், அசுரன் என்று பொருள் உண்டு. அக்வானால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+