GTA 5 அன்று ஜில்லா டூயட்டில் விஜய்.. பிரதமராக வேட்பாளராக மோடி.. GTA 6 வரும்போது எல்லாம் மாறிடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு GTA 6 கேம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு கேம் வெளியான நிலையில், கேமிங் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக GTA 5 வெளியான 2013ஆம் ஆண்டுக்கும் இப்போது GTA 6 வெளியாகியுள்ள 2026ஆம் ஆண்டுக்கும் இடையில் இந்தியாவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

அப்போது ரஜினிகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? இன்றைய முதல்வர் விஜய் விஜய் 2013ல் அவர் எந்த படத்தில் நடித்து கொண்டு இருந்தார்? இந்த 13 ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை பார்ப்போம்.

Tamil nadu India

தமிழக அரசியல்

GTA 5 வெளியானபோது, அதாவது 2013 செப்டம்பர் மாதம், தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக திமுக இல்லை. மாறாக தேமுதிக இருந்தது. 2011 தேர்தலில் 29 இடங்களில் தேமுதிக வென்ற நிலையில், விஜயகாந்த் தேமுதிக தலைவராக இருந்தார். விஜய் அப்போது அரசியலில் நுழையவில்லை. முழுமையான சினிமா நட்சத்திரமாக இருந்தார். அவரது தலைவா படம் பெரும் சர்ச்சைக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது. அவர் ஜில்லா ஷூட்டிங்கில் மோகன்லால் உடன் பிஸியாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அரசியலை தீவிரமாக பாலோ செய்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த முகமாக இருந்தார். GTA அடுத்த பார்ட் வருவதற்குள் அவர் முதல்வராகி, பிறகு எதிர்க்கட்சி தலைவராகி இப்போது கட்சியிலேயே நெருக்கடியை சந்திக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இப்போது GTA 6 வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியலின் நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. 59 ஆண்டுகளாக தொடர்ந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ஸ்டாலினும் கூட இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என ஒரு ரவுண்டு வந்துவிட்டார். 2026 தேர்தலில் கொளத்தூரில் அதிர்ச்சி தோல்வியும் அவருக்கு கிடைத்து.

தேசிய அரசியல்

தேசிய அரசியலிலும் இந்த காலகட்டத்தில் மிக பெரிய மாற்றங்கள் நடந்துவிட்டன. 2013 செப்டம்பர் 13ஆம் தேதி, அதாவது GTA 5 வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். 2026ல் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அதேபோல் 2013ல் காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி இருந்தார். 2014ல் அவரது தலைமையில் படுதோல்வி. இப்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸ் மீண்டு வரும் நிலையில், ராகுல் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

தமிழ் சினிமா

2013ல் GTA 5 வெளியானபோது ரஜினிகாந்த் 'எந்திரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு "ரானா" படத்தில் 2011ல் நடிக்கவிருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சுமார் 4 ஆண்டுகள் அவரது எந்தவொரு படமும் ரீலிஸாகவில்லை. GTA 5 வெளியான அந்த காலகட்டத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் 2014ல் வெளியானது.

இப்போது 2026ல் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிக பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமான "ஜெயிலர் 2" வசூல் சாதனை படைத்தது. அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார்.

2013 செப்டம்பர் 6ஆம் தேதி தான் அவரது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் ரிலிசாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தொடங்கியிருந்தார். அன்று டிவி தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக இடத்தை போராடி கொண்டு இருந்தவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். 2026ல் தனது 25வது படமான பராசக்திக்கு பிறகு 'சேயோன்', 'எஸ்கே27' என பிஸியாக இருக்கிறார்.

2013ல் அனிருத் வயது வெறும் 22. '3', 'எதிர்நீச்சல்' என இரண்டு படங்களின் ஆடியோ மட்டுமே வெளியாகியிருந்தது. இப்போது 2026ல் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ள அவர், இப்போது வெளியாகும் அனைத்து பெரிய பட்ஜெட் படங்களுக்கும் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக இருக்கிறார்.

விளையாட்டு

2013ல் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான போட்டிகளுக்கும் தோனி கேப்டனாக இருந்தார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற உற்சாகத்தில் இருந்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வழிநடத்தி வந்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் அப்போது இளம் பேட்ஸ்மேன்கள். தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் இருந்தனர். GTA 4 வெளியான போது ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில்கூட அறிமுகமாகவில்லை.

2026ல் தோனி ஐபிஎல் வீரராக இருந்து ஓய்வு பெற்று, சிஎஸ்கே அணியின் மெண்டராக மாறியுள்ளார். கோலி, ரோஹித் இருவரும் 2024 டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்தும், பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

2013ல் சென்னையை சேர்ந்த ஏழு வயது சிறுவனாக இருந்த டி. குகேஷ், பள்ளியில் செஸ் கற்று கொள்ள தொடங்கியிருந்தார். இன்று உலகின் இளம் வயது உலக செஸ் சாம்பியன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

தொழில்நுட்பம்

2013 என்பது ஜியோவுக்கு முந்தைய காலகட்டம். அப்போது இணையம் என்பது காஸ்ட்லி ஒன்று. ஒரு மாதத்துக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த சுமார் ரூ.250 செலவழிக்க வேண்டியிருந்தது. வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பிய பிறகுகூட உடனே பதறி போய் டேட்டாவை ஆப் செய்யும் காலம் அது. யூடியூப் எல்லாம் பலர் ஓபன் கூட செய்ய மாட்டார்கள். 2026ல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜியோ வருகைக்கு பிறகு இப்போது கிட்டத்தட்ட நாடு முழுக்க 5ஜி கிடைக்கிறது. அதிவேக பிராட்பேண்ட், மொபைல் இணையம் மூலம் பெரிய கேம்களைக்கூட எளிதாக டவுன்லோடு செய்ய முடிகிறது.

பணம் செலுத்துவதிலும் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2013ல் UPI என்ற தொழில்நுட்பமே அறிமுகமாகவில்லை. ஆட்டோவில் பயணம், டீ, காபி என எதுவாக இருந்தாலும் ரொக்கம் தான். பஸ் பேருந்துகளில் சில்லறைக்கே தினசரி சண்டையை பார்த்த காலம் அது. மேலும், அந்த காலகட்டத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன. இப்போது டீக்கடை முதல் நகை கடை வரை யுபிஐ தான். எல்லாவற்றுக்கும் QR கோடு ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

சென்னை

2013ல் GTA 5 வெளியானபோது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை. பல இடங்களில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வந்தன. ஆனால், 2026ல் விமான நிலையம் முதல் சென்ட்ரல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவைகள் சென்னையின் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகளும் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது.

2013ல் GTA 5 வெளியானபோது இருந்த இந்தியாவுக்கும், 2026ல் GTA 6 வெளியாகியுள்ள இந்தியாவுக்கும் இடையே வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே இடைவெளி. ஆனால், அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், அன்றாட வாழ்க்கை என அனைத்து துறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்தால் ஒரு தலைமுறையே கடந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+