அரசியலில் தனுஷுக்கு ஓபனிங் சூப்பர்! தவெக ஆட்சி கவிழுமா? அனிருத் திருமணத்தை கணித்த ஜெயஸ்ரீ கணிப்பு
சென்னை: தனுஷ் முதல்வராவாரா, அஜித் அரசியலுக்கு வருவாரா, தவெக ஆட்சி கவிழுமா என்ற பல்வேறு கேள்விகள் Tarot Reader ஜெயஸ்ரீயிடம் கேட்கப்பட்டது. அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் திருமணத்தை சரியாக கணித்ததால் தற்போது வைரலாகி வருகிறார்.
சாணக்கியா டிவியின் ரங்கராஜ் பாண்டே, ஜெயஸ்ரீயை நேர்காணல் செய்தார். அப்போது அவரிடம் அரசியல் தொடர்பாக நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கு ஜெயஸ்ரீ தனது டாரட் கார்டுகளை குலுக்கி போட்டு சீட்டுகளை எடுத்து பதில்களை கூறியிருந்தார். அவற்றை காணலாம்.

அவரிடம் "தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருமா" என கேட்டதற்கு "இப்போது இல்லை" என்று ஜெயஸ்ரீ தெரிவித்தார். அது போல் "தனுஷ் அரசியலுக்கு வந்து முதல்வராவாரா" என ரங்கராஜ் பாண்டே கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் "ஓபனிங் நன்றாக இருக்கும். அதன்பிறகு அவரால் போக முடியாது. முதல்வராகவும் முடியாது.".
தனுஷ் முதல்வராக மாட்டாரா?
இதையடுத்து ரங்கராஜ் பாண்டே, "தனுஷ் எப்போதுமே முதல்வராக முடியாதா" என கேட்டார். அதற்கு டாரட் ரீடர் ஜெயஸ்ரீ கூறுகையில், அவர் எப்போதும் முதல்வராக முடியாது" என்றார்.
இதைத் தொடர்ந்து அஜித் அரசியலுக்கு வருவாரா என கேள்வி கேட்கப்பட்டது. அப்போது டாரட் ரீடிங் கார்டை குலுக்கி எடுத்த ஜெயஸ்ரீ, "அஜித் எப்போதுமே அரசியலுக்கு வர மாட்டார்".
வேறு நடிகர் முதல்வராவாரா?
தமிழகத்தில் இன்னொரு நடிகர் முதல்வராவாரா என ரங்கராஜ் பாண்டே கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயஸ்ரீ, கண்டிப்பாக இல்ல என்றார். "விஜய்யின் அரசு கவிழக் கூடிய வாய்ப்பிருக்கிறதா" என்பது குறித்து ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விக்கு ஜெயஸ்ரீ பதிலளிக்கையில், "விஜய்யின் ஆட்சி கவிழ்வதற்கான சூழல் எழும், ஆனால் அதை அவர்கள் தடுத்து நிறுத்தி ஆட்சியை முழுமையாக நடத்துவார்கள்". என்றார்.
விஜய் ஆட்சி
இதையடுத்து பாண்டே, "விஜய் ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்குமா" என கேட்டார். கார்டை குலுக்கி போட்டு எடுத்த ஜெயஸ்ரீ, நிச்சயம் நிலைக்கும் என்றார். பாண்டே, "அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என முதல்வராக இருந்தது போல் தவெகவில் விஜய்யை தவிர வேறு யாராவது முதல்வராக வாய்ப்பிருக்கிறதா?" என கேட்டார்.
ஜெயஸ்ரீ
அதற்கு ஜெயஸ்ரீ, "விஜய்யை தவிர வேறு யாரும் முதல்வராகும் வாய்ப்பு தவெகவில் இல்லை" என்றார். பாண்டே இன்னொரு கேள்வியை கேட்டார், அதாவது அதிமுக, திமுக போல் நீண்டு நிலைத்திருக்கக் கூடிய கட்சியாக தவெக இருக்குமா? என கேட்டார். அதற்கு ஜெயஸ்ரீ, "தவெக லாங் லாஸ்டிங்காக இருப்பது ரொம்ப கஷ்டம்" என்றார்.
அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினாலும் அஜித்துக்கு அது போல் ஒரு எண்ணம் இல்லை என்பது ஏற்கெனவே அவர் அறிவித்திருந்ததுதான். ஆனால் அவருடைய ரசிகர்கள்தான் அவர் அரசியலுக்கு வருவார், 2031 ஆம் ஆண்டு முதல்வராவார் என கூறி வருகிறார்கள்.
அரசியலுக்கு வரும் ஆசை
ஆனால் தனுஷுக்கு அரசியலுக்கு வரும் ஆசை உள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருவதற்காக அடித்தளத்தை போட்டுக் கொண்டிருக்கிறார். 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் மையங்களை அமைப்பது, இலவச சட்ட உதவி மையங்கள் என தனுஷ் தனது அரசியலுக்கு வருவதற்கான பாதையை விரிவுப்படுத்தி வருகிறார். ஆனால் அவருக்கு ஓபனிங் சரியாக இருக்கும், ஃபினீஷிங் சரியாக இருக்காது என்கிறார்கள். அது போல் தவெக ஆட்சி கவிழ்ந்து ஸ்டாலின் முதல்வராவார் என முன்னாள் அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் அவரது ஆட்சி கவிழும் சூழல் வரும், ஆனால் கவிழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் திருமணம்
கடந்த 2012 ஆம் ஆண்டு அனிருத் தந்தி டிவியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது திருமணம் எப்படியிருக்கும் என்பதை ஜெயஸ்ரீ கணித்தார். அதில் அனிருத்துக்கு காதல் திருமணம், இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தாண்டி தகவல் தொழில் நுட்பத் துறை (tele communication) குடும்பத்தை சேர்ந்த பெண் வருவார் என்பதும் சென்னையை சேர்ந்தவர் என்பதும் இவர் கணித்தது தற்போது சரியாக உள்ளது.





Click it and Unblock the Notifications
