பெங்களூரில் 'XXX'.. '???' என்கிற பெயரில் வாக்காளர்கள்! பெயர் பட்டியலில் பெரிய குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் நகர வாக்காளர் பட்டியலில், பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'XXX' என்றும் '???' என்றும் அச்சிடப்பட்டிருப்பது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவு காரணமாக இப்படி நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

SIR பணியின் போது இந்த பிரச்சனைகள் தெரிய வந்திருக்கின்றன. பெங்களூர் நகர வாக்காளர் பட்டியலில் மட்டும் குறைந்தது 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர் பதிவுகளில் மிகப்பெரிய குளறுபடிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 'XXX', '???' என அச்சிடப்பட்டிருக்கின்றன.

Bengaluru ECI india

சில இடங்களில் பெயர்களுக்கு பதிலாக தேவையற்ற எண்கள், குறியீடுகள், ஒற்றை எழுத்துக்கள் அல்லது மெயில் ஐடி இடம்பெற்றிருக்கிறது. உறவினர்களின் பெயர்கள் இருக்க வேண்டிய இடத்தில், பெயருக்கு பதிலாக Husband, Wife, Mother என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருசில இடங்களில் Husband Husband என்ற இருமுறை தட்டச்சு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக பெங்களூரின் தாசரஹள்ளி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 324ல், அடுத்தடுத்து வரும் பல வாக்காளர்களின் பெயர்கள் முற்றிலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. உதாரணமாக வரிசை எண் 327ல், வாக்காளர் பெயர் µ¢µÌèÌ, Ï¢µÈèÈ என எழுத்தப்பட்டிருக்கின்றன. பார்ப்பவர்கள்.. இதென்ன ஏலியன் லேங்குவேஜா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

யாருக்கு தெரியும்.. இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய் கிரகத்தில் ஆளை கண்டுபிடித்து.. அவர்களையும் லிஸ்டில் சேர்த்திருக்கிறதோ என்னவோ! என்று பலரும் கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், கன்னட மொழியிலிருந்து பெயரை மொழிபெயர்க்கும்போது தவறுதலாக இப்படி வந்திருக்கிறது. இது சாப்ட்வேர் பிரச்சனைதான். இறுதி பட்டியலில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+