"அது" மட்டும் வேணும்.. கல்யாணம் வேணாமா.. கொந்தளித்த திலகா.. கோபமான கோழிக்கடைக்காரர்.. கொலை, தற்கொலை!
பெண்ணை கொன்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கோவை: "அது மட்டும் வேணும்.. கல்யாணம் வேணாமா".. என்று ஆத்திரமடைந்த கோழிக்கடைக்காரர், திலகாவை அடித்தே கொன்றுவிட்டார்.. அத்துடன் திலகாவை கொன்ற அந்த ரூமிலேயே வேட்டியை கழட்டி தூக்கு போட்டு தொங்கியும் விட்டார்!
கோவையை சேர்ந்தவர் பத்மநாபன்.. இவர் சிக்கன் கடைவைத்துள்ளார்.. 37 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆனால் பத்மநாபன் குணம் சரியில்லை.. அதனால் அவருடன் குடும்பம் நடத்த முடியாததால், அவரது மனைவி குழந்தைகளையும் அழைத்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.
ஒண்டிக்கட்டையான பத்மநாபன் இன்னும் ஆட்டம் போட ஆரம்பித்தார்.. அப்போதுதான் திலகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.. திலகாவுக்கு 33 வயது.. இவரும் கல்யாணம் ஆகி, கணவரை பிரிந்தவர்.
மனைவியை பிரிந்தவரும், கணவனை பிரிந்தவரும் காதல் செய்ய ஆரம்பித்தனர்.. 2 பேர் வீட்டிலும் ஆள் இல்லாத நேரங்களில் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.. ஒரு கட்டத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி திலகாவை கேட்டுள்ளார் பத்மநாபன்.. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
கல்யாண விஷயம் சம்பந்தமாகவே 2 பேருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.. இவர்கள் தகராறு செய்வதை பார்த்துதான் இரு வீட்டுக்கும் விஷயமே தெரியவந்தது... அதனால் கள்ளக்காதலர்களை கண்டித்தனர்.. 2 பேரும் சந்திக்க கூடாது என்று கண்டிஷனும் போட்டனர்.. அவரவர் குடும்பத்தை பாருங்கள், குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள் என்று அட்வைஸ் தந்தனர்.
இருப்பினும் உறவு தொடர்ந்தது... காளப்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு ரூமில்தான் பத்மநாபன் நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடுவாராம்.. அந்த ரூமில்தான் கள்ளக்காதலர்கள் இருவரும் சந்தித்து கொள்வார்களாம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் திலகவதி அந்த ரூமுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் கல்யாண பேச்சு எழுந்துள்ளது.. திலகாவும் மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன், கீழே கிடந்த சம்மட்டியை எடுத்து திலகாவின் தலையில் ஓங்கி அடித்தார்... இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதை பார்த்து பயந்துபோன பத்மநாபன், அதே ரூமிலேயே வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பீளமேடு போலீசார் அந்த ரூமில் கிடந்த 2 சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையும் நடக்கிறது.. இப்போது இந்த 2 பேரின் குழந்தைகள் கண்ணீருடன் நிற்கின்றன!!
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications