Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்பி சீட்டு கிடைத்ததும் அடியோடு மாறிய கமல்ஹாசன்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய கமல்ஹாசன், எம்பி சீட்டு கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று கூறுகிறார். மாநிலங்களவை சீட்டுக்காக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Nainar nagendran kamal haasan MP Seat

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தின் போது ஒரு இடத்தில் தூர்வாரப்படாத இடங்கள் மறைக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு, இதுதான் திராவிட மாடல் அரசு. முதல்வருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மதுரையில் அந்த இடங்களை எல்லாம் சுத்தப்படுத்திவிட்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதலமைச்சர் டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் ஆறுகளை எல்லாம் தூர்வார வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அவர்கள் இதனை எல்லாம் சுத்தம் செய்து இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்குச் சென்றது குறித்த கேள்விக்கு அது அவருடைய சொந்த விஷயம். அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய அவர் எம்பி சீட்டு கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று கூறுகிறார்.

எந்த மொழி பெரியது என்று கருத்து சொல்ல முடியாது. அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழி முக்கியம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா சென்ற பொழுது தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு வந்தார். கமல்ஹாசன் ராஜ்யசபா இடத்திற்காக அவரது நிலையில் இருந்து மாறிவிட்டார் எனவும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்திருக்கிறது. அது பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று. மத்திய அரசு திட்டங்கள் எதையும் மாநில அரசு செய்வதில்லை. மத்திய அரசு திட்டங்களை மறைத்து விட்டு மக்களுக்கு எதையும் செய்யாத அரசாக மாநில அரசு இருக்கிறது.

2026 இல் இல்லம்தோறும் வீடு வீடாக பெட்டிகள் செல்லும் என்று விஜய் கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அது உண்மைதான் என்றும், ரித்தீஷ் 300 கோடி ரூபாய்க்கு வீடும், ஆகாஷ் 500 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுவதாகவும், நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் Bag வாங்கி கொடுப்பதாக எல்லாம் கூறுகிறார்கள். அப்படி பார்த்தால் விஜய் கூறுவது உண்மைதான்.

எனவே, வரக்கூடிய நாட்களில் யாருக்கு வாக்களித்தால் நல்லதாக இருக்கும் என்று மக்கள் ஆராய்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாமக விவகாரம் குறித்தான கேள்விக்கு, அது உட்கட்சி பிரச்சனை. அதை பற்றி கருத்து சொல்ல முடியாது என்று கூறிச் சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+